ரௌத்திரர்கள் ஆவது எப்போது

ரௌத்திரர் ஆவது எப்பொழுது..?

மரங்களை அழிப்போருக்கு
தண்டனைகள் உண்டு..
மனிதர்களை
வெட்டுவோருக்கு
ஏது தண்டனை..?

அதெல்லாம்
பெரிய இடத்து விஷயம்
விஷமமன்று. !

கொலையுறுவோர்
எல்லோரும் குற்றவாளிகளே..
அது அப்படித்தான்..!

குண்டுகள் வெடிக்கட்டும்
ஏந்திகொள்ள
அப்பாவிகள் இருக்கிறார்கள்..!

அடப்பாவிகள் என்றோ
படுபாவிகள் என்றோ
எவரும்
தீவிரவாதிகளை ஏசிவிடாதீர்கள்..!

அடுத்த குண்டு வெடிப்புகளுக்கு
உங்களின் குடும்பங்கள்
தீனியாகக் கூடும்..

ஏழைகளின் உயிர்கள்
அதிகாரங்களுக்கும்
அரசியலுக்கும்
விளையாட்டுக்கான கருவி…

தட்டுவார்கள்
உதைப்பார்கள்
அடிப்பார்கள் வீசி எறிவார்கள்.
பசிக்காத கடலுக்கு
புசிக்கவும் தருவார்கள்..!

வாருங்கள்
வயிற்றிலும் வாயிலும்
அடித்துக்கொள்ளலாம்..!

வேறென்ன சாதாரண
குடிமகனால் செய்துவிட இயலும்..?
ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு
சர்வாதிகாரம் செய்யும்
கோட்டான்களின் குடி ஆட்சியில்..!

சைனாவை என்ன செய்துவிட இயலும்
இந்த ஐநா..?
தீவுக்கு தீனி போடுகிறேன் என்று
ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும்
சதிகார வர்க்கம்
தனுஷ் கோடியிலிருந்து
சாகசம் புரியலாம்
தமிழன் தலையை உருட்ட
ஆலோசனை கூட்டங்கள்
நிகழ்த்தலாம்..

புலிகளின் வேட்டை என்று
புழுகளாம்..
போராளிகள் மீது
பழி சுமத்தலாம்..
யூ
ஈழப்போரில் அரைகுறையான
அவயங்களில்
அன்றாட ஜீவனத்திற்கு
போராடும் அப்பாவிகள் மீது#ரௌத்திரர் ஆவது எப்பொழுது..?

மரங்களை அழிப்போருக்கு
தண்டனைகள் உண்டு..
மனிதர்களை
வெட்டுவோருக்கு
ஏது தண்டனை..?

அதெல்லாம்
பெரிய இடத்து விஷயம்
விஷமமன்று. !

கொலையுறுவோர்
எல்லோரும் குற்றவாளிகளே..
அது அப்படித்தான்..!

குண்டுகள் வெடிக்கட்டும்
ஏந்திகொள்ள
அப்பாவிகள் இருக்கிறார்கள்..!

அடப்பாவிகள் என்றோ
படுபாவிகள் என்றோ
எவரும்
தீவிரவாதிகளை ஏசிவிடாதீர்கள்..!

அடுத்த குண்டு வெடிப்புகளுக்கு
உங்களின் குடும்பங்கள்
தீனியாகக் கூடும்..

ஏழைகளின் உயிர்கள்
அதிகாரங்களுக்கும்
அரசியலுக்கும்
விளையாட்டுக்காண கருவி…

தட்டுவார்கள்
உதைப்பார்கள்
அடிப்பார்கள் வீசி எறிவார்கள்.
பசிக்காத கடலுக்கு
புசிக்கவும் தருவார்கள்..!

வாருங்கள்
வயிற்றிலும் வாயிலும்
அடித்துக்கொள்ளலாம்..!

வேறென்ன சாதாரண
குடிமகனால் செய்துவிட இயலும்..?
ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு
சர்வாதிகாரம் செய்யும்
கோட்டான்களின் குடி ஆட்சியில்..!

சைனாவை என்ன செய்துவிட இயலும்
இந்த ஐநா..?
தீவுக்கு தீனி போடுகிறேன் என்று
ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும்
சதிகார வர்க்கம்
தனுஷ் கோடியிலிருந்து
சாகசம் புரியலாம்
தமிழன் தலையை உருட்ட
ஆலோசனை கூட்டங்கள்
நிகழ்த்தலாம்..

புலிகளின் வேட்டை என்று
புழுகளாம்..
போராளிகள் மீது
பழி சுமத்தலாம்..

ஈழப்போரில் அரைகுறையான
அவயங்களில்
அன்றாட ஜீவனத்திற்கு
போராடும் அப்பாவிகள் மீது
அபாண்டம் கூறலாம்..
மிச்ச உறுப்புகளை
துடிக்கத் துடிக்க அறுக்க
கங்கணம் கட்டலாம்..

எப்போதும் ஏழைகள்தானே
குற்றவாளிகள்..

உலகமே குரல் கொடுக்கும்
சாமானியர்களுக்கென்று
சம்பவத்தின் போது மட்டும்..!

பின் எப்போதும் போல்தான்..
சாவகாசமாக அடங்கிவிடும்
புயலடித்து ஓய்ந்துவிடுவதுபோல்..!

பழக்கப்பட்டுவிட்ட
கொடுமைக்காரர்களுக்கு
பக்குவம் தெரிந்திருக்கிறது..!

பகுத்தறிவாளர்கள் மட்டுமே
இன்னும் பக்குவப்படாமல்
புலம்பி… புலம்பியே..!

மொத்தமாய் நாம்
ரௌத்திரம் காட்டாத வரைக்கும்
இப்படியான தரித்திரம்தான்..


சரித்திரம் படைக்க
யாரெல்லாம் உள்ளீர்கள்..?
கொடுமை கண்டு கூனிக் குறுகாமல்
வாருங்கள்
கூனியாகவோ
அல்லது
சகுனியாகவோ மாறலாம்..!

#சொ.சாந்தி

#கொழும்பு குண்டு வெடிப்பில் பலியானோருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்..😢😢

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 9:02 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 31

மேலே