சுமைதாங்கி

பெத்தவளுக்கு வறுமை சுமை-இவளுக்கு
வறுமை பிறந்ததால் வந்த தலைச்சுமை-அன்று
சுமையிறக்க பல சுமைதாங்கி-இன்று
சுமையேற்ற பல சுமைகள்
தீர்க்கதரிசிகள் பலர் அன்று
அவர்களெல்லாம் எங்கே இன்று
கல்லறையிலும் ஆகாசத்திலுமா-உறங்குங்கள்
நிம்மதியாக எங்களின் சுமைகளை இறக்கிவிட்டு