தவசியும் , ஆலமரமும்
ஒரு தவசி தன்னை மறந்து
தவத்தில் ஆழ்ந்திருக்கிறான்
மோனா நிலையில்,அவன் உடலை
என்னால் காண முடியவில்லை
அவன் தலையிலிருந்து காற்றை கற்றையாய்
பிரட்டை முடிகள் சடை சடையாய்
விழுதுபோல் அவன் உடலை
முழுவதும் மறைத்திருக்க
என் நினைவுக்கு வந்தது
சிறுவனாய் இருக்கும்போது
நான் பார்த்த அந்த ஆல மரம்
அதைப் பார்த்த எனக்கு அதில்
அந்த தவசியின் சடைப்போல்
விழுதுகளே நிறைவாய் தெரிய
எது மரம் என்று தேடினேன்
பின்னர் விழுதுகளுக்குப் பின்னால்
மரம் தெரிந்தது ....................
ஓ, இந்த மரம் கூட தவமிருக்கின்றதோ
ஞானம் தேடி..........
சிறுவன் நான் இதை நான்
என் தந்தையைக் கேட்க
'இருக்கலாம்' என்று அவர் சொன்னது
இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கின்றது
இன்னும் என் கேள்விக்கு விடை எனக்கு தெரியலை
நாளை என் மகன் கேட்டால் என்னென்று சொல்வேன் பதில்
'மரம் தவமிருக்கிறது' என்பேன்
இதில் தவறு ஏதாவது.....? கூறுங்கள்
நீங்களே நேயர்களே