காத்திருந்த கடைசி ரோஜா இதழும்
ரோஜா இதழ்கள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து
காற்றோடு போயின ...
அவள் வந்திருந்தால் நாங்கள் இணைந்து
அவள் கருங்குழலில் இடம் பெற்றிருப்போம்
அவள் இன்று வரவில்லை ...ஆதலால்
காற்றின் சுழலுடன் நானும் போகிறேன்
என்று கண்ணீருடன் விடை பெற்றது
காம்புடன் காத்திருந்த கடைசி ரோஜா இதழும்... !