கியரா மைரா

ரட்டைக் கொழந்தைங்க, ரண்டு பெண் கொழந்தைங்க.
@@@@
நீ அதிர்ஷ்டக்காரன்டா பாண்டி. நல்ல வரதட்சணை கெடைக்கும். இப்பவே பொண்ணுக் கெடைக்காம அலையறானுக. பெண் கொழந்தைங்க பிறப்பு விகிதம் கொறஞ்சிட்டே போகுது. உம் பொண்ணுங்க ரண்டும் கல்யாண வயசு ஆகற காலத்தில பெரிய பெரிய கோடீஸ்வரன் எல்லாம் பொண்ணுக்கேட்டு காத்துக்கெடப்பாங்கடா பாண்டி. எனக்குத்தான் ரண்டும் பசங்க. நாஞ் செஞ்ச பாவம்டா.
@@@@@
அட அதப்பத்தி இப்பவே கவலைப்படாதடா முத்து. என் பொண்ணுங்களுக்கு இப்ப பேரு வச்சாகணுமே. பாட்டிகிட்ட கேப்போம். சொல்லுங்க பாட்டி.
@@@@@
ரண்டும் பெண் கொழந்தைங்க. ஒரு கொழந்தைக்கு 'கியரா'னு (little black one) வைடா பாண்டி. இன்னொரு பொண்ணுக்கு 'மைரா'னு (honey, beloved) வச்சிருடா.
@@@@@
ரண்டும் இந்திப் பேருங்கதான் உறுதியாத் தெரியுமா பாட்டி. ஏன்னா நாம தமிழர்கள். நம்ம கொழந்தைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வச்சு நம்மள கேவலப்படுத்திக்கக் கூடாது பாட்டிம்மா.
@@@@#
கூருகெட்ட பயலே. நாஞ் சொன்னா அது நூத்துக்கு நூறு சரியா இருக்கும்டா.
@@###
அப்பா சரி. டேங்குசு பாட்டிம்மா.
@@@@
வெல்லுகம்முடா பாண்டி.

எழுதியவர் : மலர் (12-May-19, 4:24 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 35

மேலே