செலவே செய்யாம செயிக்கப்போறன்டா

கபாலி அண்ணே நம்ம தொகுதில அம்பது வேட்பாளர்கள். போட்டி கடுமையா இருக்குது. அத நெனச்சுக் கொஞ்சம் கவலையா இருக்குது அண்ணே.
@@@@@
நீயேன்டா கவலப்படற எலிமூஞ்சி ஏகாம்பரம். நான் உலகறிஞ்ச முன்னாள் ரவுடி. எல்லாப் பகுதிங்கள்லயும் எங்கிட்ட பயிற்சி எடுத்துட்ட ரவுடிங்க இருக்கிறாங்க. உனக்கே தெரியும். ஒரு பைசாசெலவு செய்யாம செயிப்பேன்டா.
@@@@#
எப்பிடி அண்ணே?
@@@
போடா எலிமூஞ்சி. அந்த ரவுடிங்க வீடு வீடாப் போயி எனது கழுகு சின்னத்தக் கட்டி அண்ணன் கபாலிக்கு ஓட்டுப் போடுங்க. அண்ணன் செயிச்சா உங்க பிரச்சனைகளை எல்லாம் தீத்து வைப்பாரு. உங்க பாதுகாப்புக்கு நாங்க உத்தரவாதம். நம்ம தொகுநி முழுவதும் குற்றச்செயல் எதுவும் நடக்காம பாத்துக்குவோம்னு கற்பூரத்தைக் கொளுத்தி சத்தியம் பண்ணறாங்கடா. ஓட்டுக்கு யாரு பணம் குடுத்தாலும் வாங்காதீங்க. அது சட்டப்படி குற்றம். எங்களுக்குத் தெரிஞ்சா பணம் குடுக்கறவங்களையும் பணம் வாங்கறவங்களையும் போலீசில் பிடிச்சுக் குடுத்துடுவோம்னு வாக்காளர்கள்கிட்டச் சொல்லி வாக்குக் கேக்கறாங்கடா எலியா.
@@@@
அண்ணே இப்ப எனக்குப் புரியுது. நீங்க செயிக்கிறது உறுதி அண்ணே.

எழுதியவர் : மலர் (11-May-19, 7:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 79

மேலே