அம்மா

அம்மா

உன்னைப்பற்றி
வார்த்தைகளாய்
சொல்லிவிட்டால்
அந்த வார்த்தை
பெரிதாகிவிடும்
உன்னைவிட!
வரிகளாய்
சேர்த்துவிட்டால்
அந்த வரிகள்
பெரிதாகிவிடும்
உன்னை விட!
வார்த்தைகளையும்
வரிகளையும்
சேர்த்து
கவிதையாய்
வடித்துவிட்டாள்
அந்த கவிதை
பெரிதாகிவிடும்
உன்னை விட!
தாய்மொழி
தமிழ் கூட
தவித்து நிற்கிறது
உன்னைப்பற்றி
எழுதும்போது!
என்
தங்க நிற
எழுதுகோல்
தடம்புரள்கிறது
உன்னைபற்றி
எழுதும்போது!
வெள்ளைக்காகிதம்
வெட்கத்தால்
நிமிராமல்
தலைகுனிகிறது
உன்னைப்பற்றி
எழுதும்போது!
யோசித்தால்
எதுவும்
தோன்றவில்லை
பெரிதாக
உன்னைவிட
அம்மா!!!

எழுதியவர் : அங்கீஸ்வரி (12-May-19, 5:57 pm)
சேர்த்தது : அங்கீஸ்வரி
Tanglish : amma
பார்வை : 1029

மேலே