என் உயிர்க் காதலி

அவள்
புன்னகையில் பூத்த
புது மலர் மட்டும் இல்லை
பூவிதழில் விரியும்
கவிதைப் புத்தகம்
அவள்
விழிகளில் கயல் ஏந்தி
நிற்கும் சித்திரம் மட்டும் இல்லை
கவிதையில் கவிஞன்
எழுத நினைக்கும் காவியம்
அவள் இல்லாத
என் வழக்கை
எழுதாத நாளேடு
வரிகள் உண்டு
வார்த்தைகள் இல்லை
அவளில்லாமல் நான்
உதிர்ந்த மடல்
அலைகள்
அடங்கிய கடல்
உயிர் அற்ற உடல்
அவள்
என் உயிர்
என் உயிர்க் காதலி
-----கவின் சாரலன்