கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது என்ன தெரியுமா- அதிர்ச்சி தகவல்

இப்போதெல்லாம் தினசரி எதாவது பயன்பாட்டுக்கு கண்டிப்பாக கூகுள் உதவும், இதனை நம்பி பல்வேறு மக்கள் தொழில் செய்து முன்னேறி வருகின்றனர். அனைத்து தகவலையும் மிக விரைவில் கொடுக்கும் வகையில் இந்த கூகுள் வலைதளம் செயல்படுகிறது. இருந்தபோதிலும் கூகுள் வலைதளத்தில் எத்தனையோ தகவல்கள் இருந்தாலும் இந்தியர்கள் பீட்சாவையும், டேட்டிங் செய்வதையுமே அதிகமா தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. என்னம்மா நீங்க இப்படி பண்ணறீங்களே மா: மேலும் கலர்புல்லான படங்கள்.! கூகுள் அறிவித்த தகவலின் அடிப்படையில் இந்தியர்கள் இணையத்திற்கு வருவதே புதிய உறவுகளை தேடவும், பல்வேறு உணவுகளை வாங்கவும் தான் என்ற நிலை உள்ளதாக தெரிகிறது.

13 சதவிகிதம்

கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பிடும்போது டேட்டிங் தொடர்பான விவரங்களைத் தேடியோர் எண்ணிக்கையில் 2018-ல் 37 சதவிகிதம் அதிகரித்ததாக கூகுள் ஆய்வில் கூறப்பட்டுள்ளது, பின்பு திருமணத்திற்கான மேட்ரிமோனி தொடர்பான தேடுத்தல் 13 சதவிகிதம் மட்டுமே உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்சா

உணவு வகைகளில் இந்தியர்கள் பீட்சா உணவையே அதிகம் தேடுவதாகவும் கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூகுள் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் மாநில மொழிகளிலேயே அதிக தகவல்கள் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது 10ல் 9பேர் மாநில மொழிகளிலேயே தகவல்களை தேடுகின்றனர். போலி அஸ்ட்ராய்டால் ஹிரோஷீமாவை போல அழியும் நியூயார்க்.!

வீடியோகள்

மேலும் இந்தியர்கள் இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், அதுவும் 33சதவிகிதம் பொழுதுபோக்கு தொடர்பான வீடியோகள், 80சதவிகிதம் வாகனங்கள் குறித்த வீடியோக்களையும் பார்க்கின்றனர்.
செல்போன்கள்
பின்பு வணிகம், கல்வி, வாழ்வாதராம் குறித்த தேடுதல்கள் கலவையாக உள்ளன, அதேசமயம் செல்போன்கள் மூலம் உணவுகளை ஆரடர் செய்வது அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| மே 13, 2019,

எழுதியவர் : பிரகாஷ் (13-May-19, 7:57 pm)
பார்வை : 19

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே