படி தாண்டியவன்
என்னை விட்டு பிரிந்து சென்றாய்,
ஏனோ நம் எதிர்காலத்திற்கு..
ஆனால்,நரகம் ஆகிறது.
என் நிகழ்காலம்..
ஆயிரம் சொந்தங்கள் அருகில் ஊர்ந்தாலும்,
அன்பே,உன் நினைவு மட்டும் நெஞ்சில் ஊஞ்சலாடுகிறது..
உணவை பாராமல் உழைக்கின்றாய்..
நான் உன்னை காணாமல் தவிக்கின்றேன்..
எண்ணம் முழுதும் உன் மேல்..
என்ன செய்வேன் இனி மேல்..
தனியறையில் தவிக்கின்றேன்..
தனிமரமாய் நிற்கின்றேன்..
மாதத்தின் முடிவில் உன் சம்பளத்திற்காக காத்திருப்பேன் என்பதில் வெக்கமில்லை... ஏனென்றால்,அதன் வழியில் உன் இரத்தமும்,வியர்வையும் காண்கின்றேன்..
நீ வரும் பாதையில் விழி வைக்கின்றேன்..
நீ வருவாய் என...