மனீஷா பஞ்சகம் ஆதி முனிவர் சங்கரர்
குருவின் பாத கமலங்களில் சமர்ப்பணம் !
======================================
கங்கையில் நீராடி நடந்து வரும் ஆதி முனிவன் சங்கரன் முன்
ஒரு நாள் சண்டாளன்-- தீண்டத் தகாதவன் எதிர்ப்படுகிறான்.
தூரிகர்த்தும் --தூர விலகிப் போ என்று சொல்கிறான் முனிவன்
சண்டாளன் முனிவனிடம் இரண்டு வினாக்களை எழுப்புகிறான்.
கேள்விகள் இரண்டு :---
===================
அன்னமய என்னுடல் தன்னிலி ருந்துனது
அன்னமய ஊனுடல் தன்னையா அல்லது
ஆன்மா விலிருந்து ஆன்மாவா எந்தவொன்று
அந்தண தூரவில கிச்செல்ல வேண்டுமென்று
நீவிரும்பு கின்றனை சொல் !
அன்னமயாதன்னமயம் அதவா
--------------சைதன்யமேவ சைதன்யாத் |
த்விஜவர தூரிகர்த்தும் வாஞ்சஸி
--------------கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி || ----------------முதற் கேள்வி
கங்கைப் புனல்நீர் புலயனில்லச் சாக்கடை
என்றிடும் வேற்றுமை யுண்டோ கதிருக்கு
அன்றியும் பொற்குட மட்குட பேதமுண்டோ
யாவிலுமு றையலை யில்லாஆன் மாதனக்கு
நாயுண்போன் அந்தண னென்ப துமுண்டோ
பெரும்மோகம் எங்கிருந் துன்னிடம் வந்தது
சொல்லிடுவாய் அந்தண னே ! --------------------------இரண்டாவது கேள்வி
கங்கைக் கரையில் நீராடி வரும் ஆதி முனிவனை எதிர்கொள்கிறான்
ஒரு சண்டாளன். சங்கரர் அவனை தூர விலகிப்போ என்கிறார் .
எது விலக வேண்டும் இந்த உடலா அல்லது உள்ளிருக்கும் ஆன்மாவா
எது என்று முதல் வினா எழுப்புகிறான் .
உலகிற்கு ஒளி தரும் ஆதவன் கங்கை நீர் என்றும் சண்டாளன் வீட்டுச்
சாக்கடை என்றும் பேதம் பாராட்டுகிறதா ?
அல்லது இந்த ஆகாயம் பொற் குடத்தில் விரிந்தது அல்லது மண் குடத்தில்
விரிந்தது என்று பேதம் காண்கிறதா ?
அத்துவைத வேதாந்த தத்துவத்தை உலகிற்கு உரைக்க வந்த மா முனிவ
உனக்கிந்த பேதமும் மோகமும் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியமான
இரண்டாவது வினாவையும் எழுப்புகிறான் .
இனி பஞ்சகம் எனும் இந்நூலின் ஐந்து விடைகள் :--
=============================================
விடை ---1
முதல் விடையில் யார் தனக்கு குரு என்பதை சங்கரர் சொல்கிறார் .
-----------------------------------------------------------------------------------------------------
ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ் ஃ புடதரா யா ஸம்விதுஜ்ஜ்ரும்பதே
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத் ஸாக்ஷிணீ
சைவாஹம் ந ச த்ருச்யவஸ்த்விதி த்ருடப் ப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத்
சாண்டலோஅஸ்து ஸ து த்விஜோஅஸ்து குருரித்யேஷா மனீஷா மம || 1 ||
விழிப்பில் கனவில் உறக்கத் தினில்தெளிவாய்
தூய உணர்வாய் வெளிப்படுமோ அவ்வுணர்வு
தாமரையோன் ஆதிஎறும்பு ஈறாக ஊடுருவி
எல்லா உடலிலும் நிற்கும் சகத்சாட்சி
அந்த ஒருபொருளே நான்காண் பதற்கில்லை
இத்திட ஞானத்தை பெற்றிட்ட பின்னினி
அந்தணனோ சண்டாள னோயவனே என்குரு
ஈதென் திடநம்பிக் கை ||1||
(மனீஷா மம )
விடை ---2
ப்ரஹ்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணையாஅஷேஷம் மயா கல்பிதம்
இத்தம் யஸ்ய திருட மதி :ஸுகதரே நிதயே பரே நிர்மலே
சாண்டாலோஅஸ்து ஸ து த்விஜோஅஸ்து குருத்ரியேஷா மனீஷா மம || 2 ||
நானென் பதும்பிரம்மம் இப்பிரபஞ் சம்விரிவு
நான்னென் றிடும்பிரம்ம மேயனைத்தும் என்றறியா
நான்முக் குணபேதக் கற்பனை என்றஞானம்
நான்திட மாய்பெற ஆனந்த நித்யபரம்
நான்தான்யென் பான்மறையோன் அன்றி புலையனோ
நான்போற்றும் ஆசான் அவனேதான் என்றிடுவேன்
ஈதென் திடநம்பிக் கை || 2 ||
-----ஆதி சங்கரர்
தமிழில் வெண்பாக்களாக ---கவின்சாரலன்
இதுவரை எழுதியதை ஒரு தொகுப்பில் தந்திருக்கிறேன்
மேலும் மூன்று விடைகளை தொடர்ந்து தனிப் பதிவில் பார்ப்போம்
தத்துவ ஆர்வலர்கள் படிக்கலாம் . விரும்பினால் கருத்துரைக்கலாம்