மாலை நிலாவுக்கும் பொறாமை வரும்

மடிமீது நான் படுத்திருந்தால்
மாலை நிலாவுக்கும் பொறாமை வரும்
இதழோடும் உன் புன்னகையில்
இளவேனில் பூக்களும் நாணித் தலை குனியும்
குழலாடும் தென்றல்
குற்றாலயமாய் குதூகலிக்க
குனிந்து என் இதழ்மீது நீ எழுதும் இலக்கியத்தில்
இன்னொரு அகநானூறு எழுதும் தமிழ் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-19, 10:09 am)
பார்வை : 107

மேலே