அவள்
காமினியாய் காமத்தால் என்னை
நனைத்தபின் அவள் பிரேமியாய்
உரு மாறி காதல் மழைபொழிந்தாள்
தடுமாறிய என் மனதில் காமம் வேறு
காதல் வேறு என்பதை தெள்ளத்தெளிவாக்கி
காமம்தான் காதலுக்கு thalai வாசல் என்றாலே
அதைத் திறந்து உள்ளே சென்றால்
காணும் கார்பா க்ரிகத்தில் குறைவதே
என்றும் அழியா காதல் என்றாள்
காம வெறி நீங்கிஅறிவொளி என்னுள்
பெருகியதே