அந்தப் பால் வேற இந்தப் பால் வேற

பையனுக்கு என்ன இந்திப் பேரை வைக்கிறதுன்னு தெரில பாட்டிம்மா..
@@@@@
'தூத்'துனு வையுடா.
@@@@
அய்யோ பாட்டிம்மா இந்தில 'தூத்'ன்னா 'பால்'ன்னு அர்த்தம். குடிக்கிற 'பால்'ஐயா ஒரு பேரா பையனுக்கு வைக்கிறது?
@@@@
அட கூருகெட்டவனே இந்திப் படங்க பாக்கற எனக்குத் 'தூத்'துக்கு அர்த்தம் தெரியாதா? ஏன்டா 'அமலா பால்'னு பேரு இருக்குது. திரைக் காட்சில "வாங்க மிசுட்டர் பால்"னு சொல்லறாங்க.
@@@@
பாட்டிம்மா அந்தப் 'பால்' வேற இந்தப் 'பால்' வேற.
@@@@
என்னடா வேற?
@@@@
'அமலா பால்'ல இருக்க 'பால்' கிறிஸ்து மதத்துக்காரங்க பேரு. அந்த மதத்தை சேர்ந்த ஆண்களுக்கான பேரு 'பால்' (Paul). கிறிஸ்துவ மதத்தில ஒரு புனிதர் பேரு தான் 'பால்'
@@@@@
அது சரிடா. உம் பையனுக்கு 'தூத்'ன்னே வைடா. தமிழர்கள்ல இந்தி தெரிஞ்சவங்க நம்மூர் யாருமே இல்ல. சனங்க எல்லாம் புதுமையான உம் பையன் பேரக் கேட்டா "சுவீட்டு நேமு'ன்னு சொல்லி உன்னையும் உன் மனைவி செல்வியையும் பாராட்டுவாங்கடா.
@@@@@
சரிங்க பாட்டிம்மா. எந் 'தூத்' செல்லத்தையும் செல்வியையும் நாளைக்கே வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்.
@@@
மகராசனா செய்யுடா முத்து. எஞ் செல்லக் கொள்ளாப் பேரன் 'தூத்'தைப் பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கறன்டா.

எழுதியவர் : மலர் (16-May-19, 9:18 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 80

சிறந்த நகைச்சுவைகள்

மேலே