ஷுக் ராஜ்

(செல்பேசி உரையாடல்)
ஏன்டா மண்ணாங்கட்டி, வடக்க நீ வேலை பாக்கப் போயி மூணு மாசம் ஆகுது. எங் கூடப் பேச உனக்கு இவ்வளவு நாள ஆச்சா?
@@@@@
பாட்டிம்மா, நான் தமிழ் நாட்டில இருக்கிற வரைக்கும்தான் மண்ணாங்கட்டி. நம்ம குலதெயவத்தோட பேரு. வடக்க வந்த ஒரே வாரத்தில எம் பேர 'ஷுக் ராஜ்'னு மாத்திட்டேன். என்னைய இனிமே நீங்க அந்தப் பேரச் சொல்லித்தான் கூப்பிடணும்.
@@@@@
ஏன்டப்பா மண்ணாங்கட்டி சுக்கு ராசு உனக்கு வேற பேரு கெடைக்கலயா? இஞ்சி ராசு, மிளகு ராசு, மஞ்சள் ராசு, கடுகு ராசுன்னு வச்சுக்க வேண்டியதுதானு.
@@@@
இங்க நீங்க எனக்கு வச்ச நம்ம சாமி பேர 'மண்ணங்காட்டி', 'மாணாங்கட்டி'னு ஆளுக்கொருவிதமா உச்சரிச்சுக் கூப்படறாங்க. அதான் இந்திக்காரங்க வாயில நுழையற பேரா வச்சுட்டேன். என்னோட மேல் அதிகாரி பேரு 'ஷுக் ராம்'. ரொம்ப நல்த மனுசன். அதனால அவரு பேருள எனக்கு மரியாதை அதிகம். அதனால எம் பேர 'ஷுக் ராஜ்'னு மாத்திட்டேன்
@@@
சரிடா சாமி சுக்கு, நீ நல்லா மகராசனா இருந்தா எனக்கு அதே போதும்டா கண்ணு.

எழுதியவர் : மலர் (17-May-19, 9:45 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 60

சிறந்த நகைச்சுவைகள்

மேலே