விண்ணவருக்கு இணையான விவசாயியைப் போற்று

நெல் விளைந்த பூமியிலே
புதர் புதராய் முட்செடிகள்
நீரும் இல்லை ஓட்ட ஏறும் இல்லை
காரால் விளையும் கார் நெல்லும் இல்லை

கரம்பாய் மாறி கனலை வாங்கி
தரிசாய் தவிக்கும் பசித்த பூமியை
வசிக்கும் இடமாய் மாற்ற துடிக்கும் மனிதரால்
வளங்கள் எல்லாம் வழக்கொழிந்து போனதே

கிடைத்த நிலத்தின் வளத்தைக் கூட்டி
தழையால் எருவால் சத்தைப் புகுத்தி
விதைத்த எவற்றையும் புனிதமாய் பார்த்த
விண்ணவருக்கு இணையான விவசாயியைப் போற்று

பழமும் காயும் பல்வகை உணவும்
சுவையும் மணமும் சுழ்நிலை யாவும்
படைத்தவன் வாழ்வில் பல்வகைத் துன்பம்
களைவதை விரும்பா கூட்டத்தினாலே சாவை நோக்கி விவசாயம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-May-19, 7:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 2056

மேலே