பண்பில் குறைந்து பழகவில்லை

முடிந்த வரை காயப்படுத்திவிட்டாய்
என் மனதில் உயர்வான இடத்தில் நீ
எத்தவறும் இனி என்னால் நிகழாது

பண்பில் குறைந்து பழகவில்லை உன்னிடம் - நீ
பரிகாசித்த போதெல்லாம் உன்னை பாசம் காத்தது
அலுவல் தொடர்பாகவே நீண்ட அளாவல் நம்மிடையே
காசின் சூழலால் கவனம் சிதறினாய் - உனக்கு

துயர் தொடர்ந்த போது தொடர்ந்து பேசினாய்
துவள நான் வந்த போது ஏளனித்து எங்கோ சென்றாய்
அத்தனையையும் நான் மறந்தாலும்

அகந்தையோடு பேசினாய் ஏசினாய் அவமதித்தாய்
என்றாலும் நீ நன்றாய் எக்காலமும் வாழ வேண்டும்
என்றாவது ஒரு நாள் எனதருமை உணர்ந்தால் போதும்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-May-19, 6:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே