முதல் இரவு

பாலில்லை!பழமில்லை!
படுக்கையில் பூவிதழில்லை!
விருப்பில்லை!சுவையில்லை!
மஞ்சம் இருப்பவன் கணவன் இல்லை!
அன்று !
மெய்யில் வலுவில்லை!
கையில் பணமில்லை!
வையம் தனில் வாழ
நாதி எனக்கில்லை!
உண்டு!
உடலுண்டு!உயிருண்டு!
உடலிலே வயிறுண்டு!
வயிற்றிலே வதைத்தெடுக்கும் பசியுண்டு!
வேலைக்குச் சென்ற இடமெல்லாம்
என் சேலையே லஞ்சமாய்க் கேட்டான்!
மறுத்தேன்! வேலை தர மறுத்தான்
தவித்தேன்!வேளை உணவின்றி துடித்தேன்!
வயிற்றுப் பசிதீர்க்க,
ஆண்கள் வயிற்றுக் கீழ் பசி தீர்க்கும்
வேலையே தந்தது விதி!
இன்றுதான்
முதல் நாள்! முதல் இரவு!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (28-May-19, 9:35 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : muthal iravu
பார்வை : 1292

மேலே