பழையது

பழையது புதியது என்பன
அந்தந்த காலகட்டத்தில்
நாம் நிர்ணயிப்பது -நேற்றைய
ஏழைகளின் உயிர்க்காப்பு
பழைய சோறும், பச்சைமிளகாய்
சிறு வெங்காயமும் இன்று
ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்
கிடைக்கும் பலர் விரும்பி
ஏற்கும் ஒரு அறிய சத்துணவு!
ஒரு பிளேட்டு ஐநூறு ரூபாய் !
ஏழையின் சொல் விலைபோகாது
என்பர், கிராமத்தில் பழையது
சத்துணவு என்று அன்று கூறினார்
ஏழைகள் மட்டும் ஏற்று அதை
உண்டு மகிழ்ந்து உழைத்து வாழ
இன்று வெளிநாட்டார் இதை ஒரு
அரிய சத்துணவு என்று தீர்ப்பு கூற
அரங்கேறியது 'பழையது'
நட்சத்திர ஓட்டல்களில் மெனுவில் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-May-19, 8:39 pm)
Tanglish : paLaiyathu
பார்வை : 129

மேலே