முதுமை கூட அழகு

சுருங்கிய கண்ணின் கடை பார்வை அழகு..

பல் இல்லா வாயின் சிரிப்பு
அழகு..

மெலிந்த உடலின் மெது நடை
அழகு..

நரைத்த முடியின் வெண்ணிறம்
அழகு..

நடையில் கொஞ்சம் நடுகம்
அழகு..

கேட்பதில் கொஞ்சம் தயக்கம்
அழகு..

தேவையில் நிறைந்த ஏக்கமும்
அழகு..

பாசத்தில் பரவிய பார்வையும்
அழகு..

முதுமை கூட அழகு..

எழுதியவர் : Havish (31-May-19, 10:48 am)
சேர்த்தது : Havisu
பார்வை : 2921

மேலே