வலையில் சிலந்தி

இனிய மனம் இளம் பருவம்
எங்கு சுற்றியும் ஓரிடத்தில்
மட்டும் குறிப்பிட்டு நிற்கும் மனம்
அந்த இடம் காதலில் மட்டும் ,

காதலில் விழுந்தால் சுமையொன்றை
பாரமற்று சுமக்கின்றதே மனம்/
ஆனால்அதன் வலி நெருடல் ஏக்கம்
புரியாதா புதிராகி மனிதனை ஆட்கொள்கிறது

காதலில் ஓர் ஆயிரம் கற்பனைகள்
படிப்பதில்தான் சுகமும் சோர்வும்
சுமப்பதுதான் சுகமென்று
துணிந்தவன் சுமக்கட்டுமே
அதுதான் தன்னலமற்ற காதல்

அத்தகைய காதலில் தியாகம் அன்பு
வாழ்வில் சுடரொளியுடன் பிரகாசிக்கும்
உண்மைக் காதல் உள்ளத்தில்
ஒழிவதில்லை உறங்குவதில்லை
காதல் மகா சக்தி அதில் மனிதன் /
சிலந்தி பின்னிய வலையில் சிலந்தியே ,,,,

எழுதியவர் : பாத்திமாமலர் (31-May-19, 11:32 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 209

மேலே