நீ நுழைந்த இதயம் சிதையாதடி

கத்திரியில் மழையே
கடுங்குளிரில் அனலே
வெண் நிறத்து மலரே
வித்தியாசச் சுவையே

உச்சி முகர்ந்து கொஞ்சிடவே
உருகுதடி என் உள்ளம்
உருகுகின்ற வெண்ணெயைப் போல்
உள்ளதடி உன்னுருவம்

பாலாடைக் கட்டியால்
பல மாடி வீடுக்கட்டி - அதில்
பட்டு நிறத்தாளே உனை நான்
பாதுகாத்து வைப்பேனே

நூறு குதிரை வேகங்கொண்டு
நுண்ணியமாய் எனைத் தாக்கிணும்
நீ நுழைந்த இதயம் சிதையாதடி
நறுமணம் கொண்ட நாயகியே.
-- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-May-19, 7:04 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 770

மேலே