💫புமராங் 💫
✒ *சிறுகதை -3⃣* ✒
💫 *பூமராங்* 💫
எப்போதும் போல மிக சாதாரண 🌅திங்கட்கிழமையாகவே அன்றையநாள் துவங்கியது , தனது வாழ்க்கையை மாற்றப்போகும் திங்கள்தான் இது என்று *கதிரவனுக்கு* அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, வழக்கம்போலவே அலுவலகம் சென்றதும் தனது *பேஸ்புக் மற்றும் வாட்ஸப்பை* ஒருமுறை நோட்டமிட்டு பிறகு வேலையை ஆரம்பித்தான்.
அலுவலம் முழுவதும் திடீர் பரபரப்பு தொற்றிக்கொள்ள, அனைவரும் என்ன ஏது என்று தங்களுக்குள் முனுமுனுக்க தொடங்கினர்.
அப்போது ஒரு குரல் சார் எல்லோரையும் உடனே GM meeting hall-ல் assemble ஆக சொல்கிறார் என்று கூறியவாறே விரைவாக அடுத்த அடுத்த பிரிவுகளுக்கு தகவலை தெரிவித்துக்கொண்டே சென்றார் அந்த *எள்ளுனா எண்ணையா இருக்கும் ஆபீஸ் பியூன்*🏃🏃
அனைவரும் மீட்டிங் ஹாலில் ஒன்று கூடினர். 👨👩👧👦
Good morning one & all என்ற உற்சாக குரலுடன் உள்ளே நுழைந்தார் GM , Ok நான் ரொம்ப டைம் எடுக்க விரும்பவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். சரியாக 15 மாசத்துல நம்ம கம்பெனியோட *CHAIRMAN* அமெரிக்காவில் இருந்து வருகிறார்.
அவர் வரும்போது நம்மதான் இந்தியாவில் நம்பர் 1⃣ ஆக👍🏻 இருக்கணும், நம்ம PRODUCT தான் சேல்ஸ்ல அதிகமா இருக்கணும் , சேல்ஸ்ஸ அதிகரிக்க உங்ககிட்ட என்ன action plan /idea இருக்கிறது என்று சொல்லணும் என்று கேட்க , கூட்டத்தில் இருந்த *சீனியர் மேனேஜர்* *செண்பகராமன்*, 🙋♂
சார் இப்பவே நம்மதான் சார் நம்பர் 1⃣ ல் இருக்கோம். இந்தியாவில் சேல்ஸ் ஆகிற *shampoo-ல* நம்ம Product தான் சார் நம்பர் 1⃣ ல் இருக்கு.
*( ஆம் அது ஒரு shampoo தயாரிப்பு கம்பெனி)*
ஆமா செண்பகராமன், ஆனா அது பத்தாது.
*இது கார்பரேட் உலகம் நாம் No.1⃣ல இருக்கிறது முக்கியமில்லை. No.1⃣ ல இருந்துகிட்டே இருக்கணும் அதுதான் முக்கியம் என்றார்*.
சரி எல்லோரும் உங்க idea வை எழுதி✒ கொடுத்துருங்க , that's all let's back to work bye என்று கூறி தனது உரையை முடித்தார்.
அனைவரும் தங்களது கருத்தை எழுதி கொடுத்தனர். *கதிரவனும் கொடுத்தான்*
.
15 மாதங்கள் கடந்தன. அமெரிக்காவிலிருந்து கம்பெனியின் *chariman* 👔வந்தார். அவருக்கே பெரிய ஆச்சரியம். சென்ற ஆண்டை விட 30 % விற்பனை அதிகரித்து இருந்தது.
*Wow what a achievement , How you people did it ?* என வினவினார்,
அவரிடம் கதிரவனின் கருத்தை செயல்படுத்தியதக கூறினர், *அவர் மிகவும் மகிழ்ந்து கதிரவனுக்கு ஏதேனும் பதவி உயர்வு,* 💌🎁சன்மானம் கொடுக்க தெரிவித்து மீண்டும் அமெரிக்கா கிளம்பினார்.
🤴 கதிரவனுக்கு பதவிஉயர்வு, பாராட்டுவிழா 👑ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் ஒன்று கூடினர்.
GM பேச துவங்கினார். நம்ம விற்பனையை அதிகபடுத்த நிறைய பேர் நல்ல நல்ல கருத்து தெருவிச்சிங்க , உதாரணத்துக்கு
1)சிலர் sales team க்க்கு Incentive அதிகபடுத்த சொன்னார்கள்.
2)சிலர் பொருளின் விலையை கொஞ்சம் குறைக்க சொன்னார்கள்.
3) சிலர் விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்த சொன்னார்கள்.
ஆனால் இது எல்லாம் நல்ல கருத்து , பொதுவான கருத்தும் என்றாலும் இது எல்லாமே கம்பெனியோட செலவை கொஞ்சம் அதிகபடுத்துகிற யோசனையும் கூட.
ஆனால் *கதிரவன் கொடுத்த Idea is something different , very simple , and unique too* அதனால் கம்பெனிக்கு எந்த செலவும் இல்லை. That's y அதை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். அதோட விளைவு இதோ இந்த வருடம் 30% விற்பனை அதிகரித்துள்ளது.. *அதோட கதிரவன் பதவி உயர்வு கிடைச்சிருச்சு.*
கூட்டத்தில் இருந்த செண்பகராமன் சார் அப்படி என்னசார் Idea 🤔கொடுத்தார், கதிர்
அது சிக்ரட் வெளியே சொல்ல முடியாது என்று கூறி முடித்தார்.😷
பாராட்டு விழா முடிந்தது , பாராட்டுவிழா என்பதால் கதிர் மற்றும் அவனது நண்பன் இருவரும் *கொஞ்சம் லைட்டா, டைட்டாக* வீட்டிற்க்கு திரும்பினர் .
அப்போது நண்பன் ஏண்டா கதிரு உனக்கு அவளோ பில்டப் கொடுக்குற அளவு அப்படி என்னடா idea கொடுத்த ,
டேய் மாப்ள நான் ஒன்னும் பெருசா சொல்லடா அன்னைக்கு நம்ம team leader கிட்ட லீவு கேட்டேன் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டான் , அந்த நேரம் பார்த்து இந்த பியூன் வந்து உங்க idea வா எழுதி கொடுங்கணு சொன்ன ,நான் இருந்த கடுப்புல *நம்ம shampoo bottlela , shampoo வெளிவர ஓட்டைய பெருசு பண்ணுங்கன்னு* எழுதி கொடுத்துவிட்டேன் டா , இது ஒரு idea nu promotion தந்துட்டாங்க.
மச்சி அடுத்து இப்டி *திரும்ப idea கேட்டா நீ நம்ம ஷாம்பூ கொஞ்சம் போட்ட உடனே நுரை வருது அந்த ஃபார்முலா வா கொஞ்சம் மாத்தி நுரை கொஞ்சம் லேட்டா வரமாறி ரெடி பண்ணுங்க nu எழுதி கொடு உனக்கும் promotion கிடைக்கும் டா*..........😄😃😀
அடுத்த நாள் காலை கதிர் அப்பாவிடம் இருந்து அழைப்பு , என்ன டா புரொமோஷன் கிடச்சூருக்காமே அம்மா சொன்னா , ஆம பா ,
*அங்கே வீட்டுக்குள் அம்மாவின் சத்தம் என் புள்ள கஷ்டப்பட்டு சம்பரிக்குரன் இந்த மனுசன் இப்படி பண்ணுறார் வாங்கி 15 நாளு கூட ஆகளா ஒரு பாட்டில் ஷாம்பூ வா காலிபண்ணிட்டாரு.*
என்னப்பா அம்மா சத்தம் கேட்குது .....
அட அவ சும்மா ஏதாச்சும் கத்திகிட்டே இருப்பா..............
💫புமராங் 💫
*மகிழன் @ அருண்*