அழகியும் ஆட்டுமந்தையும்
டேய் அமர் இன்னுமாமேக்கப் பன்றே வாடா சீக்கிரம்
ஏன் சத்தம் போடறே? வா காருகிட்டே போகலாம் அவன் வந்துடுவான் . சொல்லிக்கொண்டே தன் மனைவியைஅழைத்துக்கொண்டு படி இறங்கினார் சிவராமன்.
என்னங்க இது பையன் இப்படி லேட் பன்னா எப்படிங்க?
அம்மா வாம்மா சீக்கிரம். இப்படி லேட்டா வற்றீங்க. அமர் காருக்குள் இருந்து சத்தம் போட
டேய் அமர் எப்படா வந்தே? நான் வீட்டுக்கு ள்ளே இருந்து சத்தம் போட்டுகிட்டு இருக்கேன்.
எப்பவோ வந்தாச்சு ஏறுங்கம்மா சீக்கிரம்.
காருக்கு ள் மகிழ்ச்சி யாக பேசிக்கொண்டு வர பெரிய வீட்டுக்கு முன் கார்வந்து நின்றது.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க வாங்க வாங்க என்ற சத்தத்தோடு பொண்ணோட அம்மா அப்பா இன்னும் சிலபேர் வந்து வரவேற்பு கொடுத்து உள்ளே கூட்டிட்டு போனாங்க.
எல்லோரும் உட்கார்ந்து பரஸ்பரம் அறிமுகம் ஆனதும் பொண்ணை வரச்சொல்லுங்க நேரமாகுதில்லே என்று யாரோசொல்ல
அமரின்கண்கள் அலைபாய ஆரம்பித்தது.
மனசே பொறு அவசரப்பட்டு அதலபாதாளத்திலே விழுந்து டாதே.
இருந்தாலும் மனம் குதிரை யாய் பாய்ந்து ஓடி க்கொண்டு இருந்தது.
தட்டில் காபியுடன் வந்த அவளை பார்த்ததும் மனம் பட பட என அடிக்க தொடங்கியது.
தன் முன்னாள் காபிதட்டை நீட்டிய படி இவன் காதுக்கு கேட்கும் படி மெதுவாக உதடுகளை அசைத்தாள்
"ஆட்டுமந்தை வழிகாட்டிச்சா" என சொல்லி விட்டு விலகி ஒரே ஒரு பார்வையை தன் மீது வீசி விட்டு விலகி தன் தாயாரோடு நின்று கொண்டாள்
"அவளா இவள்" மனதில் இன்ப அதிர்ச்சி அலைஅடித்தாலும் இவளுக்கு என்னை எப்படி அடையாளம் தெரிந்தது?
என்னடா யோசனை பொண்ணை பிடிச்சி யிருக்கா என்று அம்மா கேட்க தலையைவேகமாக ஆட்டினான்
சரி போ.பொண்ணு உன்கூட பேசனுமாம். போடா என்று அம்மா சொல்ல எழுந்து போனான்
என்ன அப்படி பாக்கறீங்க நேத்து நீங்க வழி கேட்கும் போது நான் ஹெல்மெட் போட்டு இருந்தேன். நீங்க ஹெல்மெட் போடல.அதனால என்னை நீங்க பார்க்கல ஆனா உங்கமுகம் பார்த்ததால ஞாபக படுத்தினேன் ஆட்டுமந்தையைபத்தி
அமர் வாய் விட்டு சிரித்தான்.
ஏன் சிரிக்கிறீங்க அவள் கேட்டாள்
என் வாழ்க்கை யில நேற்றேவழிகாட்டிட்டீங்க ஆட்டுமந்தயைபார்க்கசொல்லி
சாரி தப்பா சொல்லிட்டேனா?
நோ நோ நேத்து கணுவாய் போறதுக்கு எந்த கட்ல திரும்பறதுன்னு தெரியல. அப்ப அந்த வழியா நீங்க வந்தீங்க ஹெல்மெட் போட்டு இருந்ததால உங்களநான் பார்க்கலே.
அதான் நான் பார்த்துட்டேனேசரி நீங்கள் எதுவும் சொல்லலியே?
எதபத்தி?
என்ன பிடிச்சி ருக்கா இல்லையான்னு.
என்ன கேள்வி ங்க இது எப்ப என்ன ஆட்டு மந்தை பின்னாடி போகசொன்னீங்களோ அப்பவேஉங்க பின்னாடி தானே.
அப்ப நான் ஆடா?
இருவரும் சிரித்து கொண்டே வருவதை பார்த்து இரண்டு வீட்டாரும் மகிழ்ச்சி யோடு கைகுலுக்கிகொண்டார்கள்.