பெண்களைப் புரிந்து கொள்வது எப்படி

இன்பாக்ஸ் ல ஒரு தம்பி கேட்டக் கேள்வி

"" பெண்களைப் புரிந்து கொள்வது எப்படி""

கேள்வியே தப்பு தம்பி .. பதிவு கொஞ்சம் பெருசுதான் .. அதனால என்ன படிங்க

பெண் மனசு ... Non recommendable Dissertation

பலவகை .. ஒவ்வொன்றும் ஒருவகை

இவள் இப்படித்தான் ன்னு கணிக்கவே முடியாத விசித்திரப் பைத்தியங்கள் தான்
ஓரோருப் பெண்ணும்..

ஆண்களில் விசித்திரப் பைத்தியங்கள் யாரோ என்னைப்போல் சிலரேக் காணப்படுவார்கள்

ஆனா பெண்களுக்கு .. ஒரு இனார்கானிக் ல இருந்து ஆர்கானிக்க பிரிச்செடுத்த Friedrich Wohler கூட உளவியலில் ஏற்படும் இரசாயன
மாற்றத்திற்கு தெசிஸ் கொடுக்க தயங்கணும்

பெண்ணென்றப் ப்ராடக்டை டிசைன் செய்தவனே மெண்டலி சேலஞ்சியபிளா இருப்பான் ..

செய்கைகளை யூகிக்கவே முடியாத இடத்திலிருக்கும் சக உயிரி

Attempt for the failure ன்னுதான் பழக்கத்தைத் தொடங்கணும் ...

ஒரு பெண்ணைப் புரிஞ்சிக்கிறேன்னு சொல்றது சன்னியாசம் போறதுக்கும் அடுத்த ஸ்டெப் ன்னு சொல்லலாம்

ஏன்னா ..

எந்த ஒரு ஆண் தன் புருஷாயுள் முழுவதும்,
அவன் நேசிக்கும் ஒருப்பெண்ணை புரிந்துகொள்ள முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறானோ .. அவனே அப்பெண்ணுடன்
வாழும் நாள் வரை ட்ராவல் செய்யமுடியும் .. அது நட்பா இருந்தாலும் சரி, காதலா இருந்தாலும் சரி, கல்யாணமா இருந்தாலும் சரி, இல்ல லிவிங் டுகேதெர் என்னும் லாங்/பெட்/ஃபீலிங் ஷேர் ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் சரி .. பெண்ணைப் புரிந்துகொண்டவன் .. He is unfit for anything for her .

உளவியல் மருத்துவம் என்ன சொல்லுதுன்னா

ஆண்களுடைய மூளை அளவு பெண்களுடைய மூளையைவிட.. சுமார் 8 லிருந்து 13 சதவிகிதம் வரை பெரிதாகி இருக்கும் ..

மூளையின் செயல்பாடு பொருத்தம் அல்லது வித்யாசப்படுத்திப் பார்த்தோமே ஆனால்

ஆண்களுக்கான மூளை ஒரு பக்கமாகவே செயல்பாட்டில் இருக்கும் (இடது பக்கம்) which means for verbal reasoning க்கு மட்டும், பெண்களுடைய மூளை, சுற்றியும் சிந்திக்கத் தொடங்கும் .. அதாவது cerebral area for visual, verbal and emotional responses (சிந்தித்துக் காண்பதற்கும், பேசுவதற்கும் மற்றும் உணர்ச்சி வசப்படுவதற்கும்) ஏற்றாற்போல செயலமைக்கப் பட்டிருக்கும்

அப்படி என்றால் இயற்கை எவ்வளவு அதிசயத்தைப் பிறப்பித்திருக்கிறது என்பதை
உணரமுடிகிறதா உங்களால் ..

Dopamine, serotonin and oxytocin brain love formula reaction.. இவைகளின் அளவு அட்டாச் செய்த என் வரைப்படத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாகக்
கூறப்பட்டது ஆகும் ..

இப்போ வாழ்வியலுக்கு வரலாம் ... மேற்கூறிய ரசாயன மாற்றம் ஆணிடமும் பெண்ணிடமும்
சமூகத்தில் எப்படி விளையாடுகிறது என்னும்
அபரிமிதமான ரிஸ்க்கான மனித விளையாட்டைப் பார்க்கலாமா ..

ஒரு ஓரேஞ் சாப்ட்டுடறேனே ம்ம் ப்ளீஸ் ஏன்னா அதான் எனக்கு டின்னர் ம்

Dopamine creates euphoria (நன்னிலை உணர்வு) , bliss (பேரின்பம்), motivation (ஊக்கம்), and concentration (ஒருமுகப்படுத்துதல்)

Seratotin - significant neurotransmitter, நரம்புகளைத் தாண்டித் தூண்டும் கிளர்ச்சிக் கொடுக்கும் ஒரு ரொமேண்டிக்.. சந்தோஷ உணர்வு .. Low seratotin level affords .. Feeling of depression, Low self-esteem ( underestimate தாழ்வுணர்வு), irritability (எரிச்சல்) and anxiety (பதற்றம்) .. இவைகள் ஆட்கொள்ளும்

Oxytocin - ஆக்ஸிடோசின் என்பது ஒரு நரம்பியக்கடத்தி மற்றும் ஒரு ஹார்மோன் ஆகும். அங்கு இருந்து, இது பிட்யூட்டரி சுரப்பி மூலமாக மூளையின் அடிப்பகுதியில் இணைக்கப்படுகிறது. இது பெண் இனப்பெருக்க செயல்பாடுகளில் பாலியல் செயல்பாடு, பிரசவம் மற்றும் தாய்ப்பாலூட்டல் ஆகியவற்றில் ஒரு பங்கு வகிக்கிறது..
Oxytocin is a hormone & neurotransmitter. Involved in childbirth and breast-feeding. Also associated with empathy, trust, sexual activity, and relationship-building. Most of the times called as the "love hormone," coz levels of oxytocin increase during hugging and orgasm.

சரி இனி வாழ்வியல் ..

பெண் (மனம், மூளை) பூடகங்களின் பல்கலைக் கழகம் ..

ஆண்கள் எதையும் புரியவைக்க சிரமிப்பது வீண் .. என்றால் . ஒரு ஆணின் நெருக்கம் ஏன் என்பதை .. அவன் அப்பெண்ணைத் தொடரும்
நோக்கிலேயே அறிந்துகொள்வாள் .. ஆனால்
ரிசல்ட்ஸ் அவ்ளோ எள்ளலில் கிடைக்காது
அவளுடையப் பார்வையிலோ சிரிப்பிலோ
தேடலிலோ .. பேச்சிலோ அவளை ஒரு ஆண்வசம் இழக்கிறாள் என்பது முதல் முறை மட்டும் அல்ல எத்தனை எத்தனை முறைக்கப்பாலும் சாத்தியமில்லை .
அப்படி அவள் நேசிக்கிறாள் என்று ஒரு ஆண் நினைத்தால் அது அவனுடைய ப்ரைன் கெமிக்கல் ரியாக்‌ஷன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் உடைய குறைபாடு என்றேக் கொள்ளவேண்டும் ..

எத்தனைநாள் சுற்றினாலும் கோயில் கோபுரத்திற்கு தேர் மீது காதல் வந்திடுமா என்ன

பெண்ணைப் பொறுத்தமட்டும் .. ஒரு ஆண் அவளை என்ன நினைக்கிறான் என்பதில் இல்லை .. எத்தனைதான் புகழ்ச்சி பிடித்தாலும் .. Dopamine செயல்பாடு வரையிலேயே ஒரு ஈர்ப்பாகி முடிந்துவிடும் ..

அவளைப் பற்றிய முடிவுகளை, அவளை யார்த் தொடர வேண்டும் என்பதைக் காதலில்
அவள்தான் தீர்மானிக்கிறாள் என்றால் அது உடனே நடந்துவிடுமா ..

பெண்களில் சிலப்பேர் விஷயத்தில் நடந்தும் இருக்கு அதாவது seratotin and oxytocin high-level feed னால், அவை அவர்களின் ஆண்ட்ரோஜனைத் தெறிக்கவிடுமென்றால் நடந்திருக்கும், பெண்களில் பலப்பேருடைய விஷயத்தில் நடந்ததில்லை என்றால் dopamine, seratotin and oxytocin இன் அளவு சரியாக நேர்த்தியாக மேற் சொன்னதுபோல மூளையின் செரிப்ரல் ஏரியா எல்லாப் பக்கமும் பாய்ந்தோடி சீரான அமைப்புக் கொடுக்கின்றன என்று அர்த்தம் ..

இதேன் ஆண்களால் முடியாததா என்றால் முடியாதென்பதே மெய் ..

எப்பேற்பட்ட ஆணுக்கும் அவன் எச்சூழலில் வாழ்ந்தாலும் .. திருட்டுத் தனமாக பெண்ணங்கம் ரசிக்கவேண்டும் என்பதில் சிக்கனம் கொண்ட பார்வையை அவ்வப்போது சிதறவிடுகிறான் என்பதே உண்மை ..

ஆதலால்தான் பெண்களின் பெரும்பான்மை தங்களுடைய காதல் வாழ்க்கையைப் பற்றிய முடிவை சரியாக எடுக்கின்றனர் ..

அவளால் தேர்ந்தெடுக்கப் படுகிறவனுக்கு
அவள் முதல்‌முறை அளிப்பது காதல் அல்ல
இதை மேற்கூறிய ப்ரைன் கெமிக்கல் ரியாக்‌ஷன் நேர்த்தியாக இருக்கின்ற ஆணால்
விளங்கி செயல்பட இயலும் (இதற்குக் காரணம் அவனுடைய ஃபுட் சிஸ்டம், வீட்டுச் சூழல் ... மது மயக்கம் புகைப் பழக்கம் இல்லாமை.. Self direction in a gud way இப்படி பல இருக்கு)

ஆக ஒரு பெண் தேர்வு செய்பவன் தன்‌சுய‌பழக்க வழக்கங்களால் .. எதையும் எளிதில் இழப்பவனாக இருப்பின் .. அவள் .. அவளாகக் கொடுத்த வாய்ப்பிலிருந்து நழுவிக் கொள்வாள் .. அவ்விடத்தில் காதல் அவனிடம் சாத்தியமில்லை ..

அவள் தெரிந்தெடுப்பவனிடம் அவள் எதிர்ப் பார்ப்பது .. அவளுடையா வாழ்க்கையின்
கடைநிலைவரை அவளை எச்சூழலிலிருந்தும்
காப்பவனாக இருப்பானா .. அவளுடைய
தேவைகளை நிவர்த்தி செய்யும் அளவிற்கு பொறுப்புள்ளவனாக இருப்பானா .. தன் தாய் தந்தையர் மதிக்கும் இடத்தில் அவளை வைத்திருப்பானா .. அவள் தாய் தந்தையரை
உறவுகளை .. அவளுடைய சுய மரியாதையை கடைசிவரையும் மதிப்பானா .. இவைகளைத்தான் நோட் செய்வாள்
ஆக அவள் வாய்ப்புக் கொடுத்த ஒரு ஆண் இதற்கெல்லாம் தகுதியாக இருந்தாலே
அவள் அந்த வாய்ப்பிற்கான தெரிவை உறுதிச் செய்துக் கொள்வாள் (coz of brain function and chemical reactions) நான் வெஜ் சாப்டுவதாக இருந்தாலும் பெரும்பான்மை பெண்கள் குறைவாகவே சாப்பிடுவார்கள் .. சிலர் வெளுத்துக் கட்டுவாங்க அது அவங்க வளரும் சூழல் ..

ஆக அவசரப்படும் ஆண்களே .. இந்த பொண்ணு என்ன யேமாத்திட்டான்னு
அழுறத அவள் கெட்டவார்த்தைப் போட்டு பேசுறத .. நிறுத்திட்டு வேற வேலையப்
பாக்கலாம் (காய்க்கரி .. யோகா .. மெடிடேஷன் .. குறைந்த அளவு இறைச்சி இப்படி எடுத்து
உங்களை ஷார்ப் ஆக்கிக்கலாம்)

மேற்கொண்டு சரக்கடிச்சு சுத்தி விழுந்து
சாப்பிடாமை தூங்காமை வாந்தி மயக்கம் பேதின்னா .. (அட்டாச்மெண்ட் ல எழுதிய விஷயம் தான் பாசிபிள்) க்ளவரான ஆண்களை நேசித்து அந்த அன்பினால் அடிமைப்பட்டு ஒரு‌மூலையில் கிடக்கும் பெண்களுக்கும் (அட்டாச்மெண்டில் சொன்னதே விளையும்) அதிலிருந்து வெளிவந்துவிட்டால் .. அப்போது அடிக்கும் பாருங்க ஒரு ஒளிவட்டம் மகனே எவனும்/எவளும் ஏதும் செய்யமுடியாது ..

எல்லாத்தினாலும் அடித்துத் துவைத்து எங்களால் பலரும் . பலரால் நாங்களும்
வெளிவந்தவர்கள் தான் (அதுக்காக மண்டைக்கு மேல குண்டு பல்பு எரியுதா
பொடனிக்குப் பொறவு ஒளிவட்டந் தெரியுதா ன்னு கேக்கப் ப்டாது )

என்னைப்போல ஆண்களில் .. சிலரைப்போல பெண்களில் விசித்திரப் பைத்தியங்களை விட்டுவிடுகிறேன்

ஏன்னா .. Seratotin ஆண்களுக்கும் oxytocin பெண்களுக்கும் ஹை லெவல் பெருக்கெடுத்து ஓடியதனால் எக்ஸ்ட்ரா ப்ளஸ் ப்ளஸ் எல்லாம் அனுபவிச்சு முடிச்சு நாங்க ..
இனி என்னடா இருக்குன்ற அளவுக்கு
வந்து உணர்ந்தாச்சு. இனி எங்களைப்போல உள்ள ஆண் பெண்களை பேசுவதை விட்டுவிடுகிறேனே..

நார்மல் ரேடிங் ல இருக்கும் பெண்களுக்கும்
ஆண்களுக்குமான சப்ஜக்ட் க்கு வருவோம்

பெண் - பூடகங்களின் பல்லலைக்கழகம் பெண்

மேற்கூறியது போல் அதை சரியாக புரிந்தவன் வசமல்ல .. உணர்ந்தவன் தோள்வசமே அவள் அபையம் கொள்வாள்

அவளுடைய மென்னுணர்வுகள் கோபங்களால் அரிதாரம் பூசப் பட்டிருக்கிறதென்றால் .. அது அவளை
இச்சமூகத்தின் பார்வைக்கு முன்னால்
பாதுகாக்க மட்டுமேதான்

வேதியல் கணிதத்தின் நொதிநிலையாகிறாள் பெண் .. நிலகிரி க்ளைமேட் மாதிரி மனசு எப்போ எப்புடி மாறும்னு சொல்ல முடியாது
இன்னைக்கு இருப்பதைப்போல நாளை இருக்கமாட்டாள் .. காலையில் சிரிப்பாள் .மாலையில் மல்லிகையிட்டே மரிப்பாள் பெண்
பிடிக்காத எதனையும் புன்னகைத்துக் கொண்டே புறக்கணிப்பாள் பெண்..
உணர்ந்தவனே மார்த்தட்ட முடியும் தானொரு ஆண் என ..

அவ மனசோட காலநிலை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல அவளிலிருந்து
புறப்படும் மென்மாருதமோ .. சண்டமாருதமோ
புயலோ .. சிறுத்தூறலோ எதுவாகினும்
வளைந்து கொடுக்கும் நாணலென இருத்தலே அவளுடனான வாழ்நாள் பயணத்தை(நட்பு.. வாழ்க்கை,, ரிலேஷன்ஷிப் எதுவாகினும்) தீர்மானிக்கும் .. Its just manipulation of the entire life adjustment ..

அவளை புரிகிறேன் என மெனக்கெடுவது டார்ச்சர் .. இயற்கைக்கு ஒப்பீடானவள் ஒவ்வொரு பெண்ணும் .. சிலர் பூக்கள் .. சிலர் மழைத்துளி .சிலர் காடு ... சிலர் ஆகாயம் .. சிலர் நெருப்பு ..சிலர் காற்று.. அவர்களில் சிலர் நதி .. இப்படி இப்படியென உணர்தலே ரசித்தலே .. உன்னதம் .. காற்று கோபம் கொண்டாலோ . இயற்கை முழுவதும் சீற்றம் கண்டாலோ நம்மால் கோபிக்க முடியுமா
அப்படித்தான் என்பதை .. The male has to bound

ஆகையால் .. சராசரி சிந்தையுடன் ஒருப் பெண்ணை அருகுவது என்பது ஒல்லாதது ..

Give them a gap .. திறந்த இடைவெளி கொடுங்கள் ஏதும் பேசாமல் அவளைத் தொடருங்கள் ... ரசியுங்கள் .. அவளுக்குத் தெரியாததை அவளையே அறியும்படி செய்யுங்கள் .. உங்கள் அதீத அறிவால் அவளை மெத்தனம் செய்யாதீர்கள் .. அவள் அறிந்தது குறைவே என்றாலும் கேட்டு இரசிக்கும் பக்குவத்திற்கு மாறுங்கள் ..

ஒட்டிக்கோ வெட்டிக்கோ கேரக்டர்ஸ் க்கு இது சரிவராது .. அவன் வாழ்வில் ஒரு பெண்தான் என எப்போது தீர்மானிக்கிறானோ .. அன்றிலிருந்து அவனை இழந்து அவளுக்கு உயிர் க் கொடுத்தல் வேணும் ..

அப்டின்னா .. ஈகோ பொசசிவ்னெஸ் கோபம் வராதா. அதற்குள் ன்னு கேள்வி வரும் .. அட வந்துதானே ஆகும் ம் :)

ஆளுமைகள் (personalities) இங்க வந்து முக்கியத்துவம் பெறுது

ஆளுமையின் வகைகள் ன்னு பார்த்தால்

நேராளுமை (தொடராளுமை, தொடர் விடு ஆளுமை) .. Direct, continuous and discontinuous personalities) .. பெரும்பான்மை பெண்களிடம் இருக்கும் ஆளுமைகள் .. ஆண்களிடமும்

ஈர்ப்பு ஆளுமை (attractive personality).. குறைந்த அளவு ஆண்களிடம் .. மற்றும் பெண்களிடம் இருக்கும் ஆளுமை ..

பெண்களின் விஷயத்தில் .. நேராளுமை உள்ள பெண்களுக்கு ஈர்ப்பின் ஆளுமை உள்ள ஒரு ஆண் காதலனாகவோ கணவனாகவோ அமையும் போது .. அவளின் எத்தனை ஆண்களின் பார்வைக்கு முன்னாலும் .. அவனேத் தெபடுவான் கண்கள் மூடி யோசித்தால் பெண்ணே .. எத்தனை ஆணிலும் அவளுக்கு அவனே முதற்படுவான்

நேராளுமை இருக்கும் ஆணிற்கு ஈர்ப்பின் ஆளுமை இருக்கும் பெண் வாழ்க்கைப் பட்டால் உள்ளதுக்கெல்லாம் கண்ணீரால் பதில் சொல்லும் நிலை அந்தப் பெண்ணிற்கு வரும் ..

ஏனென்றால் ஈர்ப்பின் ஆளுமை உள்ள ஆண்களோ பெண்களோ அதீத அன்பை
பக்குவமாகப் பெற்றோக் கொடுத்தோ
வந்திருப்பார்கள் ..

குறிப்பாக .. நேராளுமை மற்றும் ஈர்ப்பின் ஆளுமை உள்ள பெண்களுக்கு .. ஈர்ப்பின் ஆளுமை உள்ள ஆண்களின் மேல் .. அதீத ஈர்ப்பும் காதலும்‌ உண்டாவது எதார்த்தமே ..

ஆனால் நேராளுமை உள்ள ஆண்களுக்கு .. ஈர்ப்பின் ஆளுமை உள்ள பெண்களையும்
ஆண்களையும் பெரும்பாலும் பிடிப்பதில்லை
அவர்களை தவாறாகவேப் பார்ப்பார்கள் ..
This and all arises from manufacturing defects

ஆகையால் ஆண்களே/பெண்களே .. எல்லோரும் போதுமான அளவு ஈர்ப்பு ஆளுமையைப் பெற .. யோகா மெடிடேஷன்
உணவுமுறைகளை .. தூக்கம் மற்றும் அழகான சூழல் என உங்களை நீங்களே மேம்படுத்துங்கள்

இன்னும் பேசுனா நீளும் என் இரவும் இப்பதிவும்

எழுதியவர் : அனுசரன் (2-Jun-19, 3:09 am)
பார்வை : 145

மேலே