காதல் வலி

நீ தந்த காதல் முத்தங்களை
ஒன்று விடாமல் மனதில் சேர்த்துவைத்தேன்
நம் காதலின் பொக்கிசமாய்-அதை நினைத்து
நினைத்து ஆனந்தப் பட்டு- ஆனால் நீயோ
எனோ இன்று நம் காதலுக்கு களங்கம் தந்தாய்
என்மீது வீணாய் நீ கொண்ட சந்தேகத்தால்
நீர் நிரம்பிய பானையில் பட்ட கல்லொன்றால்
பானையில் ஓட்டை. நீரெல்லாம் வீணே
வெளியே வழிந்தோடியதொப்ப , உன் சந்தேகம்
என்னுள்ளத்தில் நான் சேர்த்துவைத்த நம் காதலை
ஓட்டையாக்கியதே…….என்னுளத்தில் இப்போது
நீயும் இல்லை , நம் காதலும் ……….அதில் இப்போது
நீ தந்த வலிதான் நிரம்பி இருக்கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jun-19, 1:44 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 144

மேலே