இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

#இசை ஞானி இளையராஜா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து..💐
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

இசைக்குப் பிறந்தவனே
விரலசைவில் ஈர்க்கின்றாய்
இன்னிசை மழையினிலே
இன்பம் சேர்க்கின்றாய்
நந்தவனமதிலே
நின்றுலாவி மகிழ்வதுபோல்
உந்தன் இசையினிலே
உள்ளம் களிக்கின்றோம்..!🎵🎵

நீ தொட்டால் தூணிசைக்கும்
தும் தும் ஓசையது
கை பட்டால் கம்பிகளும்
சரிகமப பாடிடிது
மூங்கில் முன்சுவாசி
புல்லாங் குழலிசைக்கும்
மூளைநரம்புகளை
தூண்டியே சுகமளிக்கும்🎵🎵

பஞ்ச முகி படைத்தாய்
நீயே அவளின் தாய்
கெஞ்சும் இசைக்கருவி
மீட்டியே மகிழ்விப்பாய்
நெஞ்சம் நிறைக்கும்வரை
ராகமும் நீகூட்டு
கொஞ்சும் இசையெல்லாம் அன்னையின் தாலாட்டு🎵🎵

ஆட்டுறலும் பாடியது
அன்னக்கிளி யதனில்
பாக்குரலும் பாடியது மீண்டும்கோகிலாவில்
கூட்டுக் கருவிகளில்
கொட்டும் தேன்மழையை
பாட்டில் குழைத்தவுனைப்
பாடியே மகிழ்வேனே..🎵🎵

எண்ணெயில் இடும்முறுக்கில் இன்னிசை வைத்தவனே
விண் இடிக்கும் ஓசையதை
மேளத்தில் அடித்தவனே
இன்னிசையின் ராஜாங்க
ராஜாவே ராஜாதான்
பன்னிசைத்து உனைப்பாட
பரவசம் ஆனேனே🎵🎵

“என் நரம்புவீணயுடன்"
இன்னும் நூல் படைத்தாய்
வான் தொட்ட உச்சப்புகழ்
சாகர சங்கமத்தில்
வற்றாத விருதுகளும்
பெற்றாயே கலைமகனே
வாழ்ந்திடுவாய் வாழ்வாங்கு
வையகமும் உள்ளவரை🎵🎵

🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
#சொ.சாந்தி
🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

எழுதியவர் : சொ.சாந்தி (2-Jun-19, 4:42 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 34

மேலே