முதுமொழிக் காஞ்சி 78

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி யெளிது. 8

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், பிற பெண்டிரை மிக விரும்பினார்க்கு உண்டாகும் பழி எளிது.

'பெண்டிரை விரும்பி அவர் சொல்வழி வருவார்க்குப் படும்பழி எளிது' -பிரதிபேதம்.

காமமிக்கவர் எளிதில் நிந்தையடைவர். காமமிகுதியால் பெண் வழிச்சேறலும், பிறன்மனை விழைதலும் ஆகிய ஒழுக்கத்தவறுகள் உண்டாகும்: உண்டானால் உலகத்தில் அபவாதம் மிகும்.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. 901 பெண்வழிச் சேறல்

'எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145 பிறனில் விழையாமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-19, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே