Autism மன இறுக்கம்

Autism (மன இறுக்கம்) - மருத்துவ உளவியல் சொல்வது

என்றால் மூளை மற்றும் நரம்பு இயக்கங்கள் சீராக இருப்பதில்லை .. அதுபோல் உடலும் மனமும் ஒருமித்து வேலை செய்வதில்லை

ஆட்டிசம் பலவகையில் இருக்கும் .. அந்த வகைகள் எல்லாமே உடல் ரீதி அல்லது மன‌ரீதியாக பாதிக்கப் பட்டிருப்பவையே ஆகும்

இப்போ ஆட்டிசம் இருக்கிற சிலக் குழந்தைகளைப் பார்த்தோமானால்
ஃபிசிக்கலி ஃபிட் அஹ் இருப்பாங்க
ஆனா மன ரீதியா தங்களை தயார்ப்படுத்திக்கத் தெரியாமை இப்படி இருக்கும் .. சிலக் குழந்தைகளுக்கு
உடல் ரீதியாகவும் பாதிப்பிருக்கும்
அப்படி என்றால் ஹைக்யூ லெவல்
நார்மல் குழந்தைகளைவிட கம்மியா இருக்குமா ன்னு கேட்டா .. இருக்கும்
எல்லா நார்மல் குழந்தைகளைப்போல
சமமான ஹைக்யூ லெவல்ஸ் இருக்கும்
ஆனா அவங்களுக்கு அப்நார்மல் ப்ராசஸ் எங்க வருதுன்னா தோணுறதை .. அவங்க நினைக்கிறதை express பண்றதுல இயலாமை இருக்கும் ..

குழந்தைகளுக்கு ஏன் வருகிறது

தாயிற்கு நீரழிவு நோய் இருந்தால் .. விவாக தாமதத்தினால் காலம் கழிந்து பிறக்கும் குழந்தைகள்.. நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்வதினால் .. கணவன் மனைவிக்கிடையான அதீத ஏஜ் வித்யாசம் ..
இதுபோன்ற ப்ரச்னைகளால ஆட்டிசம் குழந்தைகள் பிறக்கப்படுகிறார்கள் என்று தற்கால மருத்துவம் சொல்லுது ..

2017 சர்வேய் படி இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டிசம் குழந்தைகள்
பிறந்துள்ளதாக இருக்கு .. தற்போது எண்ணிக்கை கூடியும் இருக்கு . .. ஆட்டிசம் அதிகம் பிடித்திருப்பது ஆண் குழந்தைகளைதான் என்று அந்த சர்வே சொல்கிறது ..

Symptoms (அறிகுறி)

குழந்தைப் பிறந்து ஐந்தாறு மாதம் ஆகியும்
தாய் பால் கொடும்கும்போது .. குழந்தை தாயின் முகத்தைப் பார்க்காது.. ஒருவருடக் காலத்திற்குள் .. கண்ணிற்குத் தெரியும் நிரங்களைப் பார்த்து அதிசயிக்காது அவைகளைப் பார்க்கக்கூட செய்யாது
.. ஒலிப்பெருக்கி சத்தமோ யாரும் அழைத்தாலோ குழந்தை திரும்பிப் பார்க்காது .. இந்த குறைபாடு அக்குழந்தைக்கு ஒரு இரண்டு இரண்டரை வயதுவரை நேர்ந்தால் .. கண்டிப்பாக அக்குழந்தையின் பெற்றோர் ஒரு Autism Psychiatrist ஐ பார்ப்பது அவசியம் ..

Remedy..

மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த இயலாது .. Aberdeen ல Doctorate செய்துக் கொண்டிருக்கும்போது Grampian Autistic Society க்கு விடுமுறை நாட்களில் செல்வது வழக்கம்

அதுவொரு ஜூன் 21 ஒன்றாம் நாள் ..
International Yoga Day .. (சர்வதேச யோகா தினம்)

பரிபூரண அன்புள்ளம் கொண்டவர்களால்
மட்டும்தான் அக்குழந்தைகளின் அன்பை பெறமுடியும் .. அந்த விதத்தில் நானும் ஒரு அதிர்ஷ்டசாலிதான் .. அவர்கள் வயதையொத்த நார்மல் குழந்தைகளுடன்
அவர்கள் சேரமாட்டார்கள் .. அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் சேவையில்
நாங்கள் விடுமுறை நாட்களில் ஈடுப்பட்டிருந்தோம் ... அங்கு செட்டில் ஆன எல்லா நாட்டுக் குழந்தைகள் முதல் இளைஞர் முதியவர்கள் வரைக் கண்டு வியந்திருக்கிறோம் ..

காரணம் .. புதிதாக சேர்ந்த சிறு வயது குழந்தைகள் முதல் .. பண்டே சேர்ந்து வளர்ந்த இளம் வயது குழந்தைகள் வரை என யோகா பயிற்சி வழங்கப்பட்டு வந்திருக்கிறது ..
யோகாவினால் பலனடைந்து மனமும் உடலும் ஒரு சேர செயல்பட்டு நார்மல் மனிதர்களைப்போல் பெர்ஃபெக்ட் ஆகி அங்குள்ள புதிதாய் சேர்வோர்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உதவுகின்றனர் .. சொன்னால் நம்ப மாட்டீர்கள் அன்று என்னோட படித்த ஒரு Scottish மாணவன் ஆட்டிசம் குறைபாடு இருந்து வீட்டார் ..மற்றும் பலருடைய அன்பினால்
தலை சிறந்த யோகா பயிற்சியாளர்களின்
யோகா பயிற்சியினால் குணமாகி பூரணமாகி .. அவன் தான்‌‌ எங்களை அங்கு அழைத்துச் சென்றான் .. ஆனால் அதுவரை அவன் ஆட்டிச குறைபாடு இருந்து குணமானவன் என்று எங்களுக்குத் தெரியாது .. அவன் நடவடிக்கையும் பேச்சும் ஹைக்யூ லெவலும்
உதவும் மனமும் எங்களை வியப்பிலாழ்த்தியது.

அவன் Camphill Rudolf Steiner Schools ltd இல் பள்ளிப்பருவத்தை முடித்தவன்.. அங்கே ஆட்டிசம் இருந்து குணமாகிக் கொண்டிருக்கும்
குழந்தைகள் ஏறாளமானோரைப் பார்க்கலாம்

தற்போது இந்தியாவிலும் தலை சிறந்த யோகா டீச்சர்களால் ஆட்டிசம் குழந்தைகளுக்கு யோகாப் பயிற்சி அளித்து
குழந்தைகளின் உடல் மன செயல்பாடுகளை சீராக்கி வருகிறார்கள் ..

ஒவ்வொரு முறையின் இந்தியாவிற்கு விடுமுறைக்கு வருகையில் அதுபோல் சில பழைய ஜூன் 21 களை மிஸ் பண்ணுவேன்

ஆனாலும் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கீழுள்ள ஆட்டிசம் மையத்துக்குப் போவோம்
யோகா மூலம் வளர்ச்சிப் பெறும் ஆட்டிசக் குழந்தைகளோடு பேசுகையில் ..understanding capabilities ... ஹைக்யூ லெவல்ஸ் எல்லாமே சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்திருப்பதை உணர்ந்து மகிழ்வோம் .. நம்மால் ஆன சர்வீசை அங்கு செய்வோம் ..

""Sivesh Sutism Centre .. ஆவாரம்பாளையம், கோவை""


ஆன்மீக உளவியல்

ஆட்டிசம் குழந்தை எப்படி உருவாகிறது ..

திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும்
அற்புதங்களை எளிய தமிழில் இங்குப் பகிர்கிறேன்..

ஒரு குழந்தைப் பிறக்கிறபோது குறையோடு பிறக்கிறது என்றால் உடனே சிலர் என்ன சொல்லிடறாங்கன்னா .. இது அந்தக் குழந்தையோட கர்மா .. இல்லன்னா அக்குழந்தைய பெத்தவங்களோட கர்மான்னு
முன்ன பின்ன யோசிக்காம சொல்லிடறாங்க

இதெல்லாம் ஆய்வுக்கு அப்பாலுள்ள விஷயம் இதை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்

இந்து கலாச்சாரத்துப்படி, "சிவகோபம்"னு இருக்கு .. இதைப் பத்தி யாருக்கேனும் தெரியுமா ..

சிலப்பேர்ட்ட கேட்டா சிவன்‌கோயில் ல வச்சி ஏதோ ஒரு கெடுதல் யாருக்கோ பண்ணிட்டதால அது சிவ கோபம்
ஆகிடுச்சு அதனாலதான் அக்குழந்தை அப்படிப் பிறந்திருக்குன்னு யோசிக்காம புளுகுவாங்க

இன்னும் சிலர் அதுக்கு அடுத்தக் கட்டத்துக்குப் போயி.. ஒரு பழைய பழமொழி இருக்கு " சிவன் சொத்து‌ குலநாசம்" ன்னு பெரியவங்க சொல்ல இருக்கு .. சில சினிமா நாடகங்கள் ல கூட இந்த பழமொழியை டுபாக்கூரா யூஸ் பண்ணுவாங்க .. சிவன் கோயிலுக்கு சொந்தமான நகை ஆபரணம் .. நிலபுலன்களை நெறிமுறைகளுக்கு
மாறாக அபகரிச்சவங்க குழந்தை ஆட்டிசத்துல பிறப்பாங்கன்னு இன்னொரு கதைய பரப்புவாங்க ..

சிவன் சொத்து குலநாசம் - நம்ம வந்து இறைவழிபாடு செஞ்சி இறைவனை அடைஞ்சிட்டோம் .. சிவனுடைய சொத்தா நம்ம ஆயிட்டோம் .. சிவன்தான் சகலமெனச் சொல்லி சரணாகெதி அடைஞ்சுட்டோம் ..
அப்டின்னா .. நமக்கு அடுத்து வார ஜெனரேஷன் கூட அப்படியே நம்மளைத் தொடர்ந்து சிவனோடவே ஐக்கியமாகிடுவாங்க .. சிவனோட சொத்தா நாம மாடிட்டோம்னா .. நமக்கு சொத்து கிடையாது.. அப்ப நம்ம பின்னால வார சொத்தெல்லாம் சிவசொத்துன்னு ஆயிடும் .. அப்போ குலத்துக்குன்னு சொத்தேதும் இருக்காது .. இதைத்தான் பண்டு சிவன் சொத்து குலநாசம் ன்னு சொன்னாங்க அது நாளாக நாளாக வேற லெவல் ல போயி நிக்கிது ம்

சரி சப்ஜெக்ட் க்கு வரலாம்

ஆட்டிசம் இருக்கிறவங்களுக்கு ஏன் சிவகோபம்ன்னு சொல்றாங்கன்னா ..
கருவைத்தான் சிவம்னு சொல்றாங்க
அப்போ அந்தக் கருக்குள்ள வந்து
திருமூலருடைய வாழ்க்கை முறையில சொல்லணும்னா கருவுருவாதல் ன்னு
திருமந்த்திரத்துல நீண்ட விளக்கங்கள்
கொடுத்திருப்பாரு ..

திருமந்திரம் வாசிக்காதவங்க வாசிங்க
மக்கா ம்

அதுல என்ன சொல்றாருன்னா .. சிவசக்தி .. ஒரு ஆண் பெண் இணைந்து உருவாகும்
கருவானது முழுமையாக சிவத்தன்மையில்
இருக்கும் எப்படி ஒரு லிங்கம் உருவாகுதோ
அதுமாதிரி ஒருப் பொதுவானத் தன்மையில்
இருக்குதுன்னு சொல்லியிருப்பார் ..

அப்போ அந்தப் பொதுவானத் தன்மையில் இருக்கிற சிவத்தன்மையில் இருக்கிறவங்களுக்குக் கோபம் வந்தால்
எப்படி இருக்கும் ம்ம் .. அப்படின்னா அது கருவரையிலேயே கோபம் கொண்டுச்சுன்னா
அது ஆட்டிசமா மாறிடும் என்பதைத்தான்
சிவகோபம் ன்னு சொல்லிருக்கார் திருமூலர் .

ஆட்டிசம் ஏன் ஆகுதுன்னு நவீன விஞ்ஞானம் நிறைய மெனக்கெடல்களில் இறங்கிருக்கு

ஆனா திருமந்திரத்துல இதுக்கான தெளிவு ஆழமா சொல்லப்பட்டிருக்கு ..

முதல்முறை ஒருப் பெண் வயிற்றில் கரு உருவாகிறபோது .. எதோ ஒரு விதத்தில்
டிஸ்டர்பன்ஸ் ஏற்பட்டுக் கரு கலைஞ்சிடுதுன்னு வச்சிக்கோங்க ..
அக்கருவினுடைய ஃபிசிக்கல் பாடி வெளியேறிடுது.. ஆனா அந்தக் கருவிற்கு ஃபிசிக்கல் பாடியைத்தாண்டி சில உடல் இருந்திருக்கும் ..

அதை திருமந்திரத்தில ப்ராண உடல், ஆன்ம உடல், மன உடல் ன்னு சொல்லியிருக்கும் ..
அப்போ அக்கரு அழிஞ்சிட்டப் பெறகு ஃபிசிக்கல் பாடி மட்டுந்தான் வெளியேறிடுது
மனமும் ஆன்மாவும் அக்கருவரைக்குள் தான்
இருக்கும் ..

அது எப்போ கரு கலைஞ்சதுல இருந்து ஒருவருடம் ஆகிதான் அது வெளியேறும்.
ஒரு வருஷத்துக்குள்ள எல்லாமே வெளியப்
போயிடுமா ன்னு கேட்டிங்கன்னா இல்ல,
முதல் ல மன உடல் வெளியேறும், பின்பு அறிவுடல் வெளியேறும் பின்பு எல்லாம் வெளியேறி .. கடைசியா ஆன்ம உடல் வெளியேறும் .. அதனால தான் ஒரு ரெண்டு வருஷம் பொறுக்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்க .. வயித்துல இருக்கும்போதே அழிஞ்சு போயிடுது இல்லையா அதன் தாக்கம் .. அது இதமா இருந்த வீடை கூடை அப்டி எளிதில் ஆன்ம சக்தி விட்டுப் போயிடுமா ம்..

அப்படி இருக்கும்போ உடனே ஒரு அஞ்சாறு மாசத்துல இன்னொரு குழந்தைக்கான முயற்சியில் ஈடுப்பட்டு கரு உருவாகும் பொழுது .. இந்த புதிதாய் உதித்த சிவம் ..
ஏற்கனவே .அழிந்த கருவின். அறிவுடல் மனவுடல் ஆன்ம உடல் இருக்கும்
கருவரையை உட்புகலாமா .. இல்லை அதற்கான அறிவு மன ஆன்ம‌ உடலுடன்
புதிதாக புகலாமா என்னும் குழப்பத்தில்
உருவாவதால் அக்கருவான புதிய சிவனுக்கு சிவகோபம் ஏற்பட்டு ..வெளியுலகிற்கு வரும்போது ஆட்டிசத்தோடு பிறக்கிறது

ஆக நவீன காலத்தில் இதைப் பற்றிய அக்கரை இல்லாமல் மக்கள் செயல்படுகிறார்கள்

Just back to see .. உடம்பில் சத்து சேராமயோ
எதனாலேயோ கருப்கலைக்கப்பட்ட நாட்களை
நினைவுப்படுத்தி .. அடுத்து சேர்வதைப் பற்றி உணரும்போது .. இவைப்போல உண்டாகும்
ப்ரவ்னைகளைத் தடுக்கலாம் மக்கா ம்

பண்டு இதற்கெனவே ஒரு முறை இருந்தது .. கருக் கலைந்துவிட்டால் .. கருவரையைத் தூய்மைப் படுத்த எனவே சில ப்ராசஸ் இருந்தது ..

இதெல்லாம் திருமந்திரத்தில் .
கருவுருவாதல் அத்தியாயத்தில் விளக்கமாக சொல்லியிருக்கும் ம் படித்து பயனடைவீர்
மக்கா ..

கரு‌ சுமக்கும் தாய்மார்கள் கருவை நல்ல முறையில் உலகிற்குக் கொண்டுவரவே
பலவிதமான யோகப்பயிற்சிகள் இருந்திருக்கு
பண்டு .. இப்போதைய தாய்மார்கள் சத்தான உணவு முறைகளையே follow-up செய்வதில்லை .. இதில் எங்கு யோகா எல்லாம்

ஆட்டிசக் குழந்தைகள் பலரும் 2 வயதிலிருந்தே சிறந்த யோகா நிபுணர்களின் மூலம் யோகாப் பயிற்சிப் பெற்று வளரும்போது படிப்படியாக உடலும் மனமும் பேலன்ஸ் அடையலாம் ..

Down Syndrome, Autism எல்லாத்துக்கும் மூலிகையோ மருந்தோ‌ கொடுத்து குணப்படுத்த முடியாது.. மனமும் உடலும்
ஒருசேர பயணிக்கா நிலைக்கு யோகா
கற்பித்தலே சிறந்த தன்னம்பிக்கை நிவாரணி.. மேலும் அவர்களுடைய வாழ்க்கைமுறையை எளிமைப் படுத்திக் கொடுக்கலாம் .. ஆட்டிசம் மருந்துகளால் குணப்படுத்த நோய் ஒன்றும் அல்ல ..

யோகாபலனளித்து குணமாகும்வரை .. அவர்களுடைய தினசரியின் எல்லா கடமைகளையும் டைரிக் குறிப்பாக
எழுதக் கொடுத்து .. ஊக்கம் கொடுக்கலாம்

நிறையக் குழந்தைகள் பூரணம் அடைந்து.. இன்றெல்லாம், ருத்ர விஷ்ணு ப்ரம்ம முடிச்சுகளறுத்து .. மூலநெருப்பு எனப்படும்
குண்டலினி யோகம் நாடிவழியே
மின்சார அதிர்வைக் கொடுத்து
மூலாதாரத்திலுள்ள செந்நீரை
அக்ஞாதாரத்திலுள்ள வெந்நீரோடு
சேர்த்து மரணம் வெல்லும் முயற்சியிலும் ஈடுப்படுவதைப் பார்க்கிறேன் நான்

எழுதியவர் : அனுசரன் (5-Jun-19, 2:33 am)
பார்வை : 130

மேலே