சிறந்த நண்பன் யார்

என் எண்ணம் புரிந்து இருந்தும்
என் தன்மை அறிந்து இருந்தும்
என் அன்பை ஏற்று இருந்தும்
என் கோவம் தணித்து இருந்தும்

என் தாய் போல நேசித்து இருந்தும்
என் தந்தை போல கண்டித்து இருந்தும்
என் அண்ணன் போல காத்து இருந்தும்
என் தம்பி போல கேளித்து இருந்தும்
என்னுள் எல்லாமாய் கலந்து இருந்தும்

என்னால் ஏற்பட்ட மன நெருடலினால்
என்னை விட்டு விலகி
என் எதிரியாக எதிர் நிற்கும் போதும்
என் ரகசியம் யாவும் எப்போதும்
ரகசியாகவே காத்து
என் பலத்தோடு மட்டும் மோதி
என்னை வெல்பவனே....
சிறந்த நண்பன்.....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (8-Jun-19, 11:43 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 996

மேலே