திங்கள் முகம் ஒத்தவனே

உன்னுருவம் என்னில் தோன்றி
உறுதியைத் தருகுதய்யா
உள்ளங்கொள்ளைக் கொண்டவனே
உருவத்தில் இளைவனே.

பலவகை மலைகளிலே
பலத்துடன் ஆள்பவனே
பண்பட்ட தமிழாலே
பல கலைகளை படைத்தவனே

திங்கள் முகம் ஒத்தவனே
எங்கள் குலம் காப்பவனே
அரசர் முதல் அனைவருக்கும்
ஆயக்கலைகளை கொடுத்தவனே

சிங்கார வேலெடுத்து
சிங்கம் போல் நடப்பவனே
சீரான இலக்கணத்தை
செந்தமிழுக்கு கொடுத்தவனே

உன்னாலே எங்கள் புகழ்
உலகமெல்லாம் செழிக்குதைய்யா
தமிழ் பண்ணாலே பாட்டிசைத்து
தாலாட்டை பாடுகின்றேன்.
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Jun-19, 3:03 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 45

மேலே