கிரேஸான கிரேசி மோகன்

கிழவர் முதல் கீழ் ஆசியாவில் வசிப்போர் வரை
கிண் எனச் சிரிப்பை சிதற வைக்கும் ஆற்றல்

வசனங்கள் வனப்பமாய் வாஞ்சையோடு
வரிசைக் கட்டி நடிப்பவருக்கு பம்மாத்து வார்த்தையாய்

அடுக்கடுக்காய் அதிலும் அழகழகாய் சிலிர்க்கும் சிரிப்பு
அருஞ்சொல் இல்லாமல் அடர்தமிழில் வட்டார வழியில்

கதையோடு ஒட்டிய கலகலப்பான உடல் மொழியில்
கனக்கச்சிதமாக கருத்தை நுழைக்கும் ஆற்றல்

பாலாஜியோடு மட்டுமில்லாமல் பலரோடு குதுகலித்த
மோகனின் முன்னணி கோமாளித்தனம் மூர்ச்சையடைந்ததே

முகத்தின் குருதி ஓட்டத்தை இதயத்தால் செலுத்தியவனே
முகம்வாடி அழுகிறோம் முயன்று வந்துவிடு மீண்டும் மகிழ்வைத் தந்திடு.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (10-Jun-19, 8:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 68

மேலே