CATCHING THE TRAIN

நான் பயணித்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின் அந்த அத்துவானமான ஸ்டேஷனில்
ஏனோ நின்றது ...ஒரு நிமிடம் 2 நிமிடம் .....5 நிமிடமாயிற்று நகரவே இல்லை

இப்ப நகராது சார் ட்ராக்கல பாறை கிடக்குது ...ஒருத்தன்
அதில்ல சார் சிக்னல் கிடைக்கல நிக்கிறான் என்கிறான் --இது இன்னொருத்தன்
ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்கிட்டு க்ராஸிங் காக நிக்குது என்று அவர்களை
அடக்கினான் இன்னொரு ஆளு

சன்னல் வழியே பார்த்தேன் ரயில் வே வேலிக்கு அருகில் ஒரு குட்டி
மரம் வெயிலில் நின்றால் ஒரு ஆளுக்கு நிழல் தரலாம் வேலி அங்கங்கே
துருப் பிடித்திருந்தது அங்கங்கே சற்று சாய்ந்தும் இருந்தது தரையில்
கொஞ்சம் புல் வெளி ஓரிரண்டு வாடாமல்லிப் பூக்கள் ...இவை அந்த
ரயில் நிலையத்திற்கு இயற்கை அழகு நல்கிக் கொண்டிருந்தன

மடியிலிருந்த சிட்னி ஷெல்டனை குப்புற மூடி வைத்து விட்டு
கீழே இறங்கினேன் . அந்த குட்டி ஸ்டேஷனலிலும் ஒரு டீ ஸ்டால் இருந்தது .
நடந்தேன்
ஒரு ப்ரூக் பாண்ட் ....இல்லை இல்லை ஒரு டீ குடுங்க ....க்ளாசில் அதிகமாகவே
நிரப்பித் தந்தான் . என் இளமையும் வசீகரமும் அந்த தாராளத்திற்கு
காரணமாயிருக்கலாம் . டீயை அருந்திக் கொண்டே கடையை நோட்டம்
விட்டேன் கொலையில் மஞ்சள் வாழைப் பழம் சாப்பிட அழைத்தது
கயிறில் தொங்கும் முறுக்கு இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் பைகளில்
அடைக்கப் பட்டிருந்தது சின்னச் சின்னச் பிளாஸ்டிக் டப்பாக்களில்
அன்பிரான்டட் மிட்டாய்கள் . அப்பா ஸ்டிரிக்ட்டாக சாப்பிடக் கூடாது
என்ற அன்ஹைஜீனிக் அயிட்டங்கள் . நண்பர்களுடன் போகும் போது
இதையெல்லாம் தவிர்க்க முடியுமா ?
அப்பொழுதெல்லாம் அப்பாவிடம் பொய்தான் சொல்வேன் .
தாயிடம் உண்மையைச் சொல்லிவிடுவேன்
வயிற்று வலி என்று சொன்னால் ரீபாயில்ட் சமோசாவை சாப்பிட்டிருப்பான்
என்று அப்பா சொல்வார்
சப்பாத்திக்கு பன்னீர் பாஜி பண்ணினேன் இல்ல பன்னீர் சரியில்லை என்று
எனக்காக அவளும் ஒரு பொய் சொல்வாள் . தாய்மைக்கு பொய்மையும்
அழகுதான் !
சரக்கு அடிப்பதில்லை . தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன் !
தம்பி இந்த ரயிலுலதானே போனும் ....ரயிலு கிளம்பி போய்க்கிட்டிருக்கு
என்று ஒருவன் பரபரத்தான் !
கொஞ்சம் வேகமாக ஓடுங்க தம்பி பிடிச்சுட்டுடலாம் என்று ஊக்கம் கொடுத்து
எல்லோரும் வழி அனுப்பினார்கள்
ஓடினேன் ஓடினேன் ....பி டி உஷாவை நன்றியோடு நினைத்துக் கொண்டு
ஓடினேன் குதிரையை குதித்தோடும் கங்காருவை நினைத்துக் கொண்டு
ட்ரெயின் அருகிலே ஓடினேன் வேகம் பிறந்தது .
ஆவோ ஆவோ ....யார் அந்த வடக்கத்திப் பெண் ..என்னைத்தான் கூப்பிடுகிறாள்
கேலப் கேலப் என்று கூவுகிறாள் நான் குதிரையா ? ஆம் குதிரைதான்...
என்ன அழகு கலைந்த கூந்தல் செக்கப் சிவந்த நிறம்....
தமிழ்ப் படத் தயாரிப்பாளன் பின்னே வந்து கோடம்பாக்கத்திற்கு கூட்டிச்
செல்லும் முன் அவள் கையைப் பிடித்து ட்ரையினைப் பிடிக்க வேண்டும்
என்ற புதிய உந்தல் பொங்கி வந்தது .டைம் ஐஸ் வெரி ஷார்ட் !
அவள் விரல் கையில் பட்டது ஆனால் பிடிக்க முடியவில்லை
இன்னும் ஒரு தம்மெடுத்து உடலை முன்னே தள்ளி
அவள் கையைப் பிடித்......
கையைப் பிடித்தேனா .....ட்ரையினைப் பிடித்தேனா அல்லது ....jQuery17105612816951529391_1560231820794?
நீங்களே யூகித்து முடிவு செய்து கொள்ளுங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-19, 11:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 161

மேலே