கல்வியில் கொள்ளை காதலில் கொலை

அந்நியமாய் ஆனோமோ நாம் அரசாங்கத்திற்கு?
அடிப்படை வசதி இல்லையென்றாலும்
அடிக்கடி கொள்ளை நடைப்பெற்றாலும்
அலட்டிக் கொள்ளாமல் உள்ளதே அரசாங்கம் ?

என்ன வகை மனநிலையில் உள்ளனர் ஆள்வோர்
உன்னதமான பொருட்களுக்கும் விலை வைத்தனரே
உழவோடு நீரையும் பெருக்க கொள்கை கொண்டனரா?
இழவோடு மக்கள் மாளட்டும் என எண்ணம் படைத்தனரோ?

கடமைக்கென கட்டமைத்து நடத்துகின்றனர் ஆட்சியை
கல்வியில் கொள்ளை காதலில் கொலை என்றாலும்
கடுமையான கடன் பெற்று நாட்டைக் கடந்து சென்றாலும்
கவலையின்றி இருப்பது காப்பாற்றும் அரசாங்கமா?

ஆளுமையான அறிவால் அரிமாவாய் நடப்பதே அரசு
ஆலகால விஷம் கொண்டு அழிக்க நினைப்பினும்
அடுத்தடுத்து ஆபத்துகள் அதிகம் வந்தாலும்
அனைத்தையும் தடுத்து ஆபத்பாந்தவனாவதே அரசு.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Jun-19, 7:34 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 21

மேலே