வெறுமையான என்னிடம்
எதையோ நினைத்து எந்நாளும் உழன்று
பதை பதைப்பாய் பயணித்து பழிக்கு அஞ்சி
விதையிலேயே வெம்பி வீணாய் பயந்து
வேண்டியதை அடைய வெலவெலத்து நின்று
கண்டவர் கூறிய அறிவுரையை கேட்டு
கொண்டதை விட்டு கோட்டையை பிடிக்க எண்ணி
கொள்கை ஏதுமில்லாமல் கொஞ்ச நாள் அலைந்து
கொடூர நிலை வரை சென்று குற்ற மனதோடு திரும்பி
படிப்பில் பயணித்து பக்குவமாய் மாறி
படு சுட்டியாய் புத்திக் கூர்மைப் பெற்று
வெறுமையான என்னிடம் வெற்றிகள் வட்டமிட
விண்ணளவு புகழோடு வீர நடை போடுகிறேன் நான்.
--- நன்னாடன்.