திடுக்கென்று தீப்பற்றும்
அடையாளம் இங்கு அது
ஜாதியாய் ஆனதுவே
அனைத்துவித கேடுக்கும்
காரணமாய் ஆனதுவே
திடுக்கென்று தீப்பற்றும்
சீமை நீராய் ஆனதுவே
தெளிவுள்ள மனிதர்களால்
தெளிக்கும் விஷமாய் ஆனதுவே
படிக்கின்ற பருவத்திலே
பறிமாறப் படுகின்றதே
பயங்காணச் செய்யுகின்ற
பல கலையைச் செய்யும் அதை
படிப்படியாய் படிய வைக்க
பலங்கொண்டு முயற்சித்து தடை செய்வோம்.
--- நன்னாடன்.