உதிரமாய் கலந்திடவே

கந்தனே உன்னை நான்
சந்திப்பேன் என்றெண்ணி
காத்துக் கொண்டிருந்தேனையா

வெந்ததை தினம் தின்று
விதி வந்ததும் மறைகின்ற
வீணான உயிரில்லை நான்

உன்னிலையில் ஒன்றியே
உதிரமாய் கலந்திடவே
என் மனம் துடிக்கின்றதே

இம் மண்ணில் நீ மனிதனாய்
இருந்த நாளை எண்ணியே
இதுகாறும் மகிழ்கின்றேனே

வெண்ணெயை உருக்கியே
நெய்யாக காய்ச்சினால்
எந்நாளும் கெடுவதில்லையே

என்னுள் நீ ஒளியாக
நுழைந்து விடும் நாளில் நான்
நெய்யாக மாறுவேனே

கண்ணான கந்தனே
கலியுக தெய்வமே
காத்தருள்வாய் எந்நாளுமே.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Jun-19, 8:18 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 190

மேலே