துரோகம்
துரோகத்தின் கத்தியைக்
கைமாற்றுகையில் தவறுதலாய்
அறுத்துத் தெறித்த
குருதியில் மின்னிய குரூரம்
குரோதத்தை உணர்த்தி வீழ்கிறது
உன் முதுகில் குத்தி
வீழ்த்திய பின்னும்
நான் தானென அறிந்த பின்னும்
அக்குறுநகையை எங்கே
ஒளித்து வைத்திருந்து என்
மீது வீசிச் சென்றாய்
எனக்கு வழங்கிய தண்டனையாய்
இக்கனத்த உடல் கனன்று
கொண்டிருக்கிறது
அக்குறுநகைப்பிற்கு பதிலாய்
குறுவாள் வீசியிருக்கலாம் அல்லவா நீ