நகைச் சுவை-கணினி நகைச் சுவை

பெரிய தம்பி - "தம்புடூ! கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு சொன்னியே என்னச்சுப்பா?"
தம்புடு - "அதுப்பா ----- வந்துப்பா ---- அதில ஒரு பெரிய பிரச்சினை வந்துருச்சு! எனக்கு
என்ன செய்யருதுன்னெ தெரியலெ!"
பெரிய தம்பி - "என்னா பெரிய பிரச்சினெ? சொல்லு பாப்பம், தீருமா தீராதான்னு"
தம்புடு - "அதுப்பா, நான் கம்ப்யூட்டர் கத்துக்கரதுக்கு எங்க உக்கார்ரதுன்னு
முடிவு பண்ண முடியலெ! மாஸ்டர் முடிவு பண்ணீட்டு சொல்லச் சொன்னாரு.
எனக்கு ஒண்ணூமே புரியல.அதான்"
பெரிய தம்பி - "இதென்னாப்பா புதுசா இருக்கு! யாரு சொன்னது இப்பிடி?"
தம்புடு - "மாஸ்டர் தான் சொன்னது. என்ன சொன்னாருன்னா, கம்ப்யுட்டருக்கு
மானிட்டருக்கு முன்னாலெ உக்காந்து கத்துகிட்டா நீ சாப்ட்டுவேர் இஞ்சினீயர்
ஆகலாம்.ஆனா கன்ம்யூட்டருக்கு மானிட்டருக்குப் பின்னாலெ உக்காந்து
கத்துகிட்டா நீ ஹார்டுவேர் இஞ்சினீர் ஆகலாம். நீ முடிவு செஞ்சுட்டு வா"
அப்டீன்னாரா எனக்கு ஒரெ குளப்பமாயிருச்சு!"
பெரிய தம்பி - "அட இதானா தம்புடூ? அதென்னான்னா,கம்ப்யூட்ருக்கு முன்னாடி உக்காந்து நீ
கத்துக்கரது சாஃப்ட்டு வேரும் அப்ளிக்கேஷங்களுந்தா! உனக்கு ஸ்க்ரீன்ல
மட்டுந்தா வேலெ! ஆனா கம்ப்யூட்டருக்குப் பின்னாடி உக்காந்து கத்துக்கரது
அப்டீங்கரது உனக்குக் கம்ப்யூட்டருக்கு உள்ளதாம் பெரும்பாலும் வேலெ!
அதாவது ஹார்டு வேர் இணைக்கர சர்வீஸ் எஞ்சினீயர்! என்ன புரிஞ்சுதா இப்ப?"
தம்புடு - "புரிஞ்சுதுப்பா! நா கம்ப்யூட்டருக்குப் பின்னாடி உக்காந்தே கத்துக்கரன்பா! புதுக்
கம்ப்யூட்டர நானெ தயாரிக்கலாமில்லையா? இது எனக்கு அப்பப் புரியல!"

எழுதியவர் : சந்திர மௌலீஸ்வரன் ம கி - (13-Jun-19, 12:19 am)
பார்வை : 118

மேலே