பத்திரிக்கை கவிதை

பத்திரிக்கை கவிதை !

தினசரி பத்திரிக்கைக்கு கூட
இன்று வெட்கம் வந்துவிட்டது
காற்றில் சலசலத்த பத்திரிக்கை
பக்கம் சென்றவுடன்
பட்டென மூடிக்கொண்டது
விரித்து பார்த்தவுடன் தெரிகிறது
அரை குறை உடையுடன்
ஆடவரும் பெண்டிரும் !


எதிர்த்த வீட்டுக்காரர் !
இரண்டு மாதம் வரமாட்டார்
அவர் வீட்டுக்குள்
வீசி எறியும் பத்திரிக்கையை
கவ்வி பிடிக்க
பயிற்சி கொடுத்தேன்
நாயிற்கு !
கவ்விய பத்திரிக்கையை
தன்னிடம் வந்து கொடுக்க
பயிற்சியை கொடுத்திருக்கிறார்
பக்கத்து வீட்டுக்காரர் !
இருவருமே எதிர்த்த வீட்டுக்காரர்
காசு கொடுத்து வாங்கும்
பத்திரிக்கையை
இலவசமாய் படிக்கத்தான் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Jun-19, 11:06 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 49

சிறந்த நகைச்சுவைகள்

மேலே