காத்திருக்கின்றன

யாருக்காகவோ
காத்திருக்கின்றன
இந்த இருக்கைகள்..
வானும் நீரும்
மலையோடு தழுவும்
அழகை ரசித்தபடி
மனம் லயித்து அதைப் பருகும்
அந்த யாருக்காகவோதான்
யாவும் மறந்து லயிப்பினில்
கட்டுட்டுண்டு மீளா உலகில்
தொலைந்துபோக விரும்பும்
அந்த யாருக்காகவோதான்
இவை காத்திருக்கின்றன
காலங்காலமாக..