அறிவும் ஆழமும்

ஆழ்ந்த அறிவுள்ளவன் ஆழ்கடல்போல்
அவன் அறிவின் ஆழம் அவனறியான்
அவனோடு பேசி பழகுவோர்க்கே தெரியும் அது
அனுமனின் பலத்தை அனுமன் மறந்திருக்க
அவனுடன் பழகிய ஜாம்பவான் அதை தெரிந்து
அவனுக்கு சொல்ல கடல் தாண்டி சீதையைக்
கண்டு ராமனிடம் சொல்லி ராமன் ராவணனோடு
பொருதி அவனை மாய்த்தான் சீதையை மீட்டான்
முழுக்குடம் தெலும்பாது என்பர் ……..
அறிஞனை அவன் அவை அடக்கத்தில்
கண்டுகொள்ளலாம் ….. கடலின் ஆழத்தை
அதன் அமைதியில் கண்டுகொள்வதுபோல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jun-19, 12:27 pm)
Tanglish : arivum aazhamum
பார்வை : 83

மேலே