சொப்பனம்
இடைவெளியின்றி கை கோர்த்து
கால் பதிக்கும் நிமிடங்கள்...
யுகங்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் தூரம் பார்த்து
இமை பிரிக்காது கண்டு கொண்டிருக்கிறேன்..
ஆம்.. நீ உறைத்தது போல நிஜத்தை மறந்து நிழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..
நிஜத்தின் பிரிவை விட நிழலின் சாயல் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது...