படியும்

கோவில் சிலைகூட
நிமிர்ந்து நின்றால்தான்
கும்பிடும் தெய்வம்,
அதுவே
குப்புறக் கிடந்தால்-
கல்லாய், படியாய்,
கழுதையும் ஏறும்..

படியும்
படியானால் கோவிலுக்கே,
குறைவதில்லை
அதன் சிறப்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Jun-19, 6:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே