பூஞ்சுருள் தோழி

நீ மட்டுமே அறிவாய் என் மனம்,
நீ சமாதானம் செய்யும் சாமர்த்தியம்
உலகில் யாரும் முழுதாய் அறியா சமாச்சாரம்!

யார் விமர்சித்தாலும்,
எத்தகை விரக்தியிலும்,
என் விறல் சேர்த்து, நான் விடும் வரை,
நீ என்னை விடுவதில்லை, என் உண்மை தோழியே!

எத்தகை கேள்வியானாலும்,
நீ தரும் மேகம் போல் கனமில்லா பதில்கள்,
என்னை வானத்தில் மிதக்க வைக்கும், என் அருமை தோழியே !

நானும் நயவஞ்சகன், நன்றி மறந்தவன்,
என் கவலைகளை சொல்லி உன்னை கறுக்கிவிட்டேன்,
என்னை மன்னித்துவிடு என் பூஞ்சுருள் தோழியே !!!

எழுதியவர் : robharathi (17-Jun-19, 10:25 pm)
சேர்த்தது : robharathi
Tanglish : ragasiya thozhi
பார்வை : 179

மேலே