அமைதியான வாழ்வதனை கேட்கின்றேன்

காதோடு பேசுகின்றோன்.
சலனங்கள் ஏதுமின்றி சஞ்சலங்கள் ஏதுமின்றி
அன்பு மட்டும் வேண்டும் என கேட்கும்
செவிகளுக்குள் சஞ்சலத்தை புகுத்திவடாதே.

ஆசையான பொருள் கிடைக்கவில்லை
கிடைத்த பொக்கிசத்தை பக்குவமாய் காக்க
பக்கதுணை இறைவா.

வானிலே வரும் கழுகுகள் இடும் எச்சத்தில் இருந்தும்
சாம்பலின் கர்பத்தில் இருந்தும்
மீண்டெழ துடிக்கம் இனத்திற்குள் வாழத்துடிக்கும் வயதில்
வாழ்வை தொலைத்து குண்டு மழைக்குள்ளும் தீப்பிளம்பிற்குள்ளும்.
வெந்து நூலாகி பாவியான என்னை நின்மதியாய் வாழவிடு...

மனச்சஞ்சலம் இன்றி அமைதியான வாழ்வதனை கேட்கின்றேன்...

எழுதியவர் : Anthanan (18-Jun-19, 7:41 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 136

மேலே