இரவு - இருட்டு

கோள பூமி கொஞ்சம் திரும்பி

குதூகலிக்கும் நேரம் இதுதான்


வானில் உள்ள வண்ண மீன்களை

வாஞ்சையுடன் பார்க்கும் நேரம்


வலசை போன பறவையெல்லாம்

விசையோடு வீடடையும் காலம்


காதல் மனம் கொண்டோருக்கெல்லாம்

காம எண்ணம் தூண்டும் காலம்


கயவர்கள் மனமகிழ்ந்து கருக்கலில்

பொருள் கொண்டோரை சிதைக்கும் நேரம்


ஒரு பாதி உலகினர் மெல்ல அமைதியாய்

ஓர் நிலையில் தூக்கத்தால் துவளும் காலமே இது.

--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Jun-19, 1:01 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 119

மேலே