கோடையில் காதல்

கோடை வெய்யல் சுட்டெரிக்க
காதலைத்தேடி கண் போன போக்கில்
என் கால்கள் போக …. எங்கிருந்தோ
கண்ணெதிரே வந்து நின்றாள் பேரழகாய்
மங்கையவள் புன்னகை உதிர்த்தாள்
உளம் குளிர்ந்தேன் காதல் கிடைக்க
நா வறண்டு கால்கள் தடுமாற அவள்
வந்தணைத்தால் என்னை தவிக்கும்
நாவிற்கு கையில் வைத்திருந்த 'பாட்டில்
' திறந்து நீரும் தந்தாள் தாகம் தீர
சுட்டெரிக்கும் கோடையும் ஊட்டியானது இப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jun-19, 12:46 pm)
Tanglish : kodaieall kaadhal
பார்வை : 86

மேலே