மனதின் ஆற்றல் வலியது

மனிதர்களே மனிதர்களே மதிப்பு மிக்க மனிதர்களே
மனிதத் தன்மை இழக்க வைக்கும் பணத்தின் பின் செல்லாதீர்

உன்னை நீ விரும்ப ஓரளவு பணம் வேண்டும்
மற்றதை நீ அழித்து பண மகுடும் சூட்டுதல் சரியோ

உழைத்து பணத்தைச் சேர்த்தால் உள்ளம் மகிழ்ந்து நிறையும்
உள்ளதில் தரகு வைத்தால் உண்மையாய் வம்சம் அழியும்

மனதின் ஆற்றல் வலியது அதற்கு மறந்தும் துன்பம் செய்யாதே
மதிக்காமல் வென்றிட எண்ணினால் மாற்ற முடியா துயரம் சேருமே

மனதின் அலை ஆயிரம் அற்புதம் செய்யுமே - அதை
ஆராயும் வித்தையைக் கற்றிடு வேதனை செய்வதை விலக்கிடு.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Jun-19, 4:10 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 675

மேலே