நீரோடிய ஆறு அதுவோ

நீரோடிய ஆறு அதுவோ

நெருப்போடும் பாதையாச்சு

நிழல் தரும் வேப்பந்தருவோ

நிறைந்த அனலை வீசலாச்சு


கருசுமக்கும் மாந்தர் எல்லாம்

அனலில் அவியும் இலையாய் ஆச்சு

காசு சேர்த்த கணக்கர் எல்லாம்

கடுந்தாகத்தில் தவிக்காலாச்சு


நீரின் மேன்மை காக்க மறந்தோம்

தேங்குமிடத்தை மூடி மறைத்தோம்

தாகம் வந்த போதெல்லாம்

ஆழ்துளையில் கிணறு அமைத்தோம்


அதற்குள் நீரு செல்லும் வழியை

ஆகாயமா அமைத்துக் கொடுக்கும் ?

அரக்க மனம் படைத்த மனிதன்

அல்லல் கொள்ள முதல் படி இது தான்


அடுக்கடுக்காய் பஞ்சம் வரும்

அதற்கு காரணம் ஐம்பூதமே ஆகும்

அதை உணர்ந்து அறிவு தெளிளிந்தால்

அர்த்தமுள்ள வாழ்வு நிறையும்.

- - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-Jun-19, 9:28 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 33

மேலே